டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம் இன்று (21.07.2026) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டலில் கல்முனை மாநகர சபையின் பூரண ஒத்துழைப்பு…

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம் இன்று (21.07.2026) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின் வழிகாட்டலில் கல்முனை மாநகர சபையின் பூரண ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் இதன்போது நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய தேவையற்ற பாத்திரங்கள், பழைய டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகள், தேங்காய் ஓடுகள், மழைநீர் தேங்கக்கூடிய ஏனைய பொருட்கள் ஆகியன தீவிரமாகச் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டன.வாரத்திற்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது ஒதுக்கி, தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும், நீர் தேங்கும் இடங்களை உடனுக்குடன் அகற்றி டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.