மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (22) முறைப்பாடு செய்துள்ளதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார். ஓட்டமாவடி காளி கோவில் இடிக்கப…

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (22) முறைப்பாடு செய்துள்ளதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி காளி கோவில் இடிக்கப்பட்டமை, நீதவான் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமை, தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் விடயம் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரச காணிகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்

முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜநாதன் பிரபாகரன், கடந்த 1990ஆம் ஆண்டு முதல் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் எழுத்துமூல ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு நீதவான் ஒருவரை இடமாற்றம் செய்து தனக்கு சாதகமான நீதவானை நியமிக்க நடவடிக்கை எடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு முறைப்பாட்டில் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஓட்டமாவடியில் இருந்த காளி கோவிலை இடித்து, அந்த இடத்தில் மீன் சந்தை மற்றும் பள்ளிவாசல் அமைக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்ததாகக் கூறப்படும் விடயம் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு கோரியுள்ளதாக இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார். விசாரணை தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் ஹிஸ்புல்லா தொடர்பில் இருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என முறைப்பாட்டில் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரச காணிகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்ததாகவும் இராஜநாதன் பிரபாகரன் கூறினார். இதேவேளை, இந்த நடவடிக்கை முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல எனவும், குறிப்பிட்ட ஒரு தனிநபருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைக்கான கோரிக்கையே எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் தனிநபர்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 6 Evening