வீட்டுத்திட்ட மிகுதி நிதியை வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமானது, இன்று(18.08.2026) அராலி மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் சஜித் பிரேமதாசவினால் இந்த…
வீட்டுத்திட்ட மிகுதி நிதியை வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, இன்று(18.08.2026) அராலி மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் சஜித் பிரேமதாசவினால் இந்த வீட்டுத்திட்டமானது வழங்தப்பட்டது.
சஜித்தால் கொண்டு வரப்பட்ட திட்டம் குறித்த வீட்டுத்திட்டத்தின் மொத்த நிதியானது ஐந்து இலட்சம் என்று கூறப்பட்டாலும் முழுமையான நிதி பயனாளிகளை சென்றடையாத காரணத்தினால் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
போராட்டமானது சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு முன்பாக ஆரம்பமாகி, சங்கானை பிரதான பேருந்து நிலையம் வரை பேரணியாக நகர்ந்தது.
இதனைத் தொடர்ந்து, பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட மனு இதன்போது மக்கள் தமது கோரிக்கைகளை பதாகைகளாக தாங்கி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் மற்றும் உதவித் திட்டப் பணிப்பாளர் ஆகியோரிடம் மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றையும் போராட்டக்காரர்கள் கையளித்தனர்.
அந்த மனுக்கள் பிரதேச செயலாளர் ஊடாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த போராட்டத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் கந்தையா இங்கேஸ்வரன், பிரதேச சபையின் உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.





-559122_850x460.jpg)



-559123_850x460.jpg)


