மடிக்கணினி மற்றும் கைப்பேசியின் கடவுச்சொற்களை வழங்குமாறு, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, அதனை வழங்காமல் இருப்பதற்காக சுரேஷ் சலேவின் வழக்கறிஞர்கள் மேன்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாக பிவ…
மடிக்கணினி மற்றும் கைப்பேசியின் கடவுச்சொற்களை வழங்குமாறு, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மதிப்பளிக்கும் அதேவேளை, அதனை வழங்காமல் இருப்பதற்காக சுரேஷ் சலேவின் வழக்கறிஞர்கள் மேன்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.நியாயமான காரணங்கள் அவர் மேலும் தெரிவிக்கையில், தமக்கு எதிராக நடைபெறும் விசாரணைக்கு உதவுமாறு சந்தேகநபர்களை கட்டாயப்படுத்த நீதிமன்றத்திற்கு கூட உரிமை இல்லை என்பது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை கொள்கை.இந்த கடவுச்சொற்களை வழங்காமல் இருப்பதற்கு பல நியாயமான காரணங்கள் உள்ளன. முதல் காரணமாக, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, ஒரு சந்தேகநபருக்கு தமக்கு எதிரான விசாரணைக்கு உதவ வேண்டிய எந்தக் கட்டாயமும் இல்லை.இரண்டாவது காரணமாக, கடவுச்சொல்லை வழங்குமாறு யாரும் சுரேஷ் சலேவுக்கு அழுத்தம் அல்லது பலவந்தம் செய்ய முடியாது. அது தவறான அழுத்தம்.
மூன்றாவது காரணமாக, அந்த கைப்பேசி மற்றும் கணினியில் உளவுத்துறை தகவல் வழங்குநர்களைப் பற்றிய மிகவும் முக்கியமான மற்றும் உணர்திறன் வாய்ந்த தகவல்கள் உள்ளன.உளவுத் தகவல் கைமாறல்ஒரு உளவுத்துறை அதிகாரி ஓய்வு பெற்றாலும், தகவல் வழங்குநர்களின் அடையாளங்கள் அந்த அதிகாரியிடம் மட்டுமே இருக்கும்.
இறுதிக் காரணமாக, கடந்த காலத்தில் உளவுத் தகவல்கள் பொலிஸாருக்கு கைமாறியதால் ஏற்பட்ட அழிவுகளைப் பற்றிய கசப்பான அனுபவங்கள் வரலாறு முழுவதும் உள்ளன. 2002ஆம் ஆண்டு நடைபெற்ற ‘மிலேனியம் சிட்டி’ காட்டிக்கொடுப்பு அதற்கு எடுத்துக்காட்டு.
அதன்மூலம் நாட்டின் உளவுப் பிரிவு முழுமையாக செயலிழந்து போனது.இந்த காரணங்களை கருத்தில் கொண்டு, நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளிக்கும் அதேவேளையில், அதனுடன் உடன்படாத அடிப்படையில் சுரேஷ் சலேவின் வழக்கறிஞர்கள் இந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்வார்கள் என நான் நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

