சமூக வலைத்தாளங்களில் ஆபாச பேசியமை தொடர்பில் நடிகை தர்ஷா குப்தாவை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுதல் போன்ற பதிவுகளை வெளியிட்ட திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது பொல…

சமூக வலைத்தாளங்களில் ஆபாச பேசியமை தொடர்பில் நடிகை தர்ஷா குப்தாவை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.

சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுதல் போன்ற பதிவுகளை வெளியிட்ட திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவுசெய்தனர். திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது வழக்கு

மேலும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சேலத்தை சேர்ந்த சட்டத்தரணி அஜித் என்பவர், மாநகர சைபர் கிரைம் பொலிஸில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் சிலர், 18 வயதுக்கும் கீழ் உள்ள இளம் வயதுடையவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஆபாசமாக பேசுதல் உள்ளிட்டவைகளை பதிவிட்டு வெளியிடுகின்றனர்.

குறிப்பாக திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பெண்கள் சமூக வலைத்தளங்களில் நேரடியாக வந்து ஆபாசத்தை தூண்டும் வகையில் பேசுகின்றனர்.

அவர்கள் பல லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். இவர்களின் நடவடிக்கையால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் மெட்டில்டா ஜோசி தலைமையிலான பொலிஸார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசுதல் போன்ற பதிவுகளை வெளியிட்ட திருச்சி சாதனா, நடிகை தர்ஷா குப்தா உள்பட 12 பேர் மீது பொலிஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

மேலும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10