முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன உயிரத்த ஞாயிறு தாக்குதலை விட பாரிய அரசியல் சம்பவத்திற்கு முக்கிய சாட்சியாளராக வாக்குமூலம் அளித்துள்ளார்.அத்தோடு சானி அபேசேக்கர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு சார்பாகவும் செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பல முக்கிய சம்பவங்களு…

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன உயிரத்த ஞாயிறு தாக்குதலை விட பாரிய அரசியல் சம்பவத்திற்கு முக்கிய சாட்சியாளராக வாக்குமூலம் அளித்துள்ளார்.அத்தோடு சானி அபேசேக்கர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு சார்பாகவும் செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பல முக்கிய சம்பவங்களுக்கு முக்கிய சாட்சியாளர் என்பதால் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், அவர் பிரதான சாட்சியாளராக இருப்பது மே 9 ஆம் திகதி கோட்டா கோ கம மீது கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் பலமான சாட்சியாளராக சந்தன விக்கிரமரத்ன விளங்குகின்றார். தேசபந்துவுக்கு எதிரான சாட்சிதேசபந்து தென்னகோன் இதில் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கூறுவதற்கான பலமான சாட்சியத்தை சந்தன விக்ரமரத்னவே குறிப்பிடுகிறார்.அவர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக வாக்குமூலங்களை அளித்துள்ளார்.

அதேபோன்று ஷானி அபேசேகர ஆட்சி மாறிய உடனேயே, 2019 நவம்பர் 20 ஆம் திகதி, பதிவிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரியவர் சந்தன விக்ரமரத்னவே. அவர் அவ்வாறு நீக்குமாறு கோரும் அளவுக்கு, அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் யாரின் பேச்சைக் கேட்டு இவ்வாறு மாற்றினார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர் சரியான தீர்மானத்தை எடுக்கவில்லை. அவர் தனது அதிகாரிகளின் பக்கம் நிற்கவில்லை. ஷானி போன்றவர்களை மாற்றினாலும், இறுதியில் ஷானிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீக்குவதற்கு முக்கிய பங்காற்றினார்.

இறுதியில் ஷானியின் பதவியுயர்வுக்கு பரிந்துரைத்தவர்களில் சந்தன விக்ரமரத்னவும் ஒருவர். ஆனால் இன்னமும் ஷானிக்குப் பதவியுயர்வு கிடைக்கவில்லை.

அதேபோன்று, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்து ஓய்வுபெற்ற ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்ட சம்பவம். அச்சம்பவம் நடந்த போது சந்தன விக்ரமரத்னவே பொலிஸ் மா அதிபராக இருந்தார். ரவி செனவிரத்னவை பொலிஸார் கைது செய்துவிட்டனர் என்பதை அறிந்து, அது தொடர்பாக அவர் பொலிஸாரிடம் விசாரணை நடத்துகின்றார். ஒரு வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதியதாலேயே அவர் கைது செய்யப்பட்டதாகவும், வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை எனவும், பொதுமக்கள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

சானி- ரவிக்கு செய்த உதவிஅதன் பின்னர் பொலிஸ் மா அதிபர் சட்டப் பிரிவின் ஆலோசனையைப் பெறுகின்றார். இது பிணையில் செல்லக்கூடிய குற்றம் என்று சட்டப் பிரிவு கூறுகிறது. அதற்கமைய, இது பிணையில் செல்லக்கூடிய குற்றமாக இருந்தபோதிலும், தேஷபந்து உள்ளிட்ட குழுவினர் வேறு ஒரு சக்தியினால் அவரைச் சிறையிலடைக்கவே முயற்சிக்கின்றனர் என்பதைப் பொலிஸ் மா அதிபர் சந்தன புரிந்துகொள்கிறார்.

பொலிஸ் பிணையில் விடுவிக்குமாறு உடனடியாக அறிவுறுத்துகின்றார். ஆனால், பொலிஸ் மா அதிபர் கூறியதைக் கூட கேட்காமல், பொலிஸ் பிணை வழங்காமல், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக ரவி செனவிரத்னவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைத்தனர். இது தொடர்பாகப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன குறிப்புகளைக் கூட எழுதியிருந்தார். இவ்வாறாக அவர் பல்வேறு விடயங்களில் பல வழிகளில் தலையிட்டிருந்தார். அது நன்மை தீமை இரு பக்கங்களையும் கொண்டுள்ளது. அவர் மரணமடைந்த சந்தர்ப்பத்தில், அவருடைய அனைத்துத் தவறுகளையும் பேசுவதை விட, அவர் பொலிஸில் ஆற்றிய பங்களிப்பைப் பேசுவது மிகவும் முக்கியமானதாகும்.

எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விடவும் தேஷபந்துவின் சம்பவத்தில் அவர் ஒரு பலமான சாட்சியாளராக இருக்கின்றார். இவ்வாறானதொரு பலமான சாட்சியாளரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். அவருடைய மரணம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.