சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக 10 ஊழல் மற்றும் ஒழுங்கீன குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், அவற்றை அடுத்த வாரம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பி…
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக 10 ஊழல் மற்றும் ஒழுங்கீன குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், அவற்றை அடுத்த வாரம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லப் பயன்பாடு, அரச சொத்துக்களின் பயன்பாடு, பணியாளர் நியமனங்கள், வாகனங்கள் மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
சபாநாயகருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள 10 குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகக் கூறிய கம்மன்பில, அந்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு சட்டம் தனது கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பு: மேற்கண்ட குற்றச்சாட்டுகள் உதய கம்மன்பில செய்தியாளர் சந்திப்பில் முன்வைத்த குற்றச்சாட்டுகளாகும். இவை தொடர்பாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ இதுவரை அதிகாரப்பூர்வ பதிலை வெளியிடவில்லை.

