பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை சமர்ப்பித்த வரைபடத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் அனைத்து நாடுகளின் பெயர்களும் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை தனது புதிய சுகாதார ஒப்பந்தங்கள…

பிரேசிலில் நடைபெற்ற சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில், அமெரிக்க வெளியுறவுத்துறை சமர்ப்பித்த வரைபடத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் அனைத்து நாடுகளின் பெயர்களும் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை தனது புதிய சுகாதார ஒப்பந்தங்கள் குறித்துப் பேசியபோது திரையில் தவறான வரைபடம் தோன்றியுள்ளது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மாநாட்டில் பங்கேற்றவர்கள் இதன் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததை அடுத்து இந்த விடயம் பூதாகரமானது.

ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஆய்வில், அந்த வரைபடத்தில் OpenAI நிறுவனத்தின் வாட்டர்மார்க் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.இதன் மூலம், அந்த வரைபடம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஓபன்ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த குளறுபடி குறித்து முழுப் பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை, நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக அவசர அவசரமாக ஸ்லைடுகளை மாற்றியபோது பணியாளர் ஒருவரால் இந்தத் தவறு நேர்ந்துவிட்டதாகக் கூறியுள்ளது.வரைபடக் குளறுபடி

கடலோர நாடான நைஜீரியா, சஹாரா பாலைவனத்திற்குள் இருப்பது போல் காட்டப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மொசாம்பிக் நாடு, ஆப்பிரிக்காவின் கொம்பு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட் நாடு, கண்டத்தின் முற்றிலும் எதிர் திசையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்லைடை உருவாக்கியவருக்கும், அதை அங்கீகரித்தவருக்கும் ஆப்பிரிக்க நாடுகள் எங்கு இருக்கின்றன என்பதே தெரியவில்லை என்று சர்வதேச ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர்.

இருப்பினும், இந்த வரைபடக் குளறுபடியைத் தாண்டி மாநாட்டின் விவாதங்கள் பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்ததாகவும், எய்ட்ஸ் நோயை ஒழிப்பதில் அமெரிக்கா தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.