சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதனை தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதல்களால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.எண்ணெய் விலை அதிகரிப்பு தற்போது, ​​ஒரு பீப்பாய்…

சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது.

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதனை தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதல்களால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.எண்ணெய் விலை அதிகரிப்பு தற்போது, ​​ஒரு பீப்பாய் பிரென்ட் ரக மசகு எண்ணெயின் விலை 79 அமெரிக்க டொலருக்கும் அதிகமாகவும், ஒரு பீப்பாய் WTI ரக எண்ணெயின் விலை 74 அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது.

இந்த இரண்டு முக்கிய எண்ணெய் விலைகளும் கடந்த வெள்ளிக்கிழமை விலைகளுடன் ஒப்பிடும்போது அதிகரிப்பை பதிவு செய்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை (10.07.2026), ஒரு பீப்பாய் பிரென்ட் ரக மசகு எண்ணெயின் விலை 76 அமெரிக்க டொலராகவும், ஒரு பீப்பாய் WTI ரக எண்ணெயின் விலை 72 அமெரிக்க டொலராகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.