சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (05) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,175.07 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன், வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 62.39 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.நேற்றைய விலை நிலவரம் இதேவேளை இ…

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (05) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,175.07 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன், வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 62.39 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.நேற்றைய விலை நிலவரம் இதேவேளை இலங்கையில் நேற்றைய தினம் (04.07.2026) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைந்திருந்தது.அதன்படி நேற்று 24 கரட் தங்க பவுண் ஒன்று 384,000 ரூபாயாக குறைந்திருந்தது.

மேலும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 353,300 ரூபாயாகவும் பதிவாகியிருந்தது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,163 ரூபாயாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.