சிரிபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம பகுதியில், காட்டு யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். செவ்வாய்க்கிழமை (01) இரவு மின்சாரம் தாக்கிய நிலையில், சிறுவன் தெஹியத்தகண்டி…

சிரிபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லேகம பகுதியில், காட்டு யானைகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். செவ்வாய்க்கிழமை (01) இரவு மின்சாரம் தாக்கிய நிலையில், சிறுவன் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.மேலதிக விசாரணைஎனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிரிபுர, பல்லேகம பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளின்படி, சந்தேகநபர் ஒருவர் தனது காணியைச் சுற்றி கம்பி வேலி அமைத்து, அதற்கு தனது வீட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வேலிக்கு அருகில் சென்ற சிறுவன் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சட்டவிரோத மின்வேலியை அமைத்ததாகக் கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சிரிபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.