தமிழ்நாடு சட்டப்பேரவையில் பா.ம.கவின் எம்.எல்.ஏ. செளமியா அன்புமணியின் நடவடிக்கைகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பா.ம.கவின் எம்.எல்.ஏ. செளமியா அன்புமணியின் நடவடிக்கைகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகி செளமியா அன்புமணி, முதல்முறையாக எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுள்ளார்.

பா.ம.க. சார்பில் 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக செளமியா அன்புமணி செயல்பட்டு வருகிறார்.

தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நடைபெறும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள், கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று செளமியா அன்புமணி முன்வைக்கும் கருத்துகள் கட்சி கடந்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் உரையாற்றும் செளமியா அன்புமணியின் காணொலி ஒன்றை பகிர்ந்துள்ள கமல்ஹாசன், அவருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன் தெரிவித்திருப்பதாவது:

அருமை. சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சகோதரி செளமியா அன்புமணியைப் பாராட்டுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.  (a)