செம்மணியில் கண்டெடுக்கப்பட்டுள்ள என்புத் தொகுதிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் மோசமான கருத்துகளுக்கு தமிழ் அரசியல் தலைவர்களும் பொறுப்புக்கூற வேண்டும் என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கரு…
செம்மணியில் கண்டெடுக்கப்பட்டுள்ள என்புத் தொகுதிகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் மோசமான கருத்துகளுக்கு தமிழ் அரசியல் தலைவர்களும் பொறுப்புக்கூற வேண்டும் என எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி மனிதப் புதைக்குழி விவகாரத்தில் தற்போது அதிகாரத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் அமைதியாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
அதிகாரத்தைப் பெற்ற பின்னரும், சிங்கள அரசியல் தலைமையின் பிடியிலிருந்து விடுபடாமல், ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே சில தமிழ் தலைவர்கள் கூட்டணி அமைத்து செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு செயற்படுபவர்கள் உண்மையான அரசியல்வாதிகள் அல்ல, மாறாக “அரசியல் தரகர்கள்” என்றே கூற வேண்டும்.
செம்மணி விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறான அல்லது மோசமான கருத்துகளை வெளியிட வேண்டாம் என நாடாளுமன்றத்தில் அறிவுறுத்தும் அதிகாரம் அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளது.
மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து தெளிவான அறிவிப்பை வெளியிட்டு, இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.









-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)