2026-ஆம் ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருப்பது குடும்பத்தில் குறையாத செல்வங்களையும் பல கோடி யாகங்கள் செய்த நற்பலன்களையும் தரும். இது தென்னிந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என்ற…
2026-ஆம் ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது
கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருப்பது குடும்பத்தில் குறையாத செல்வங்களையும் பல கோடி யாகங்கள் செய்த நற்பலன்களையும் தரும்.
இது தென்னிந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. விஷ்ணுவின் தசாவதாரங்களில் 9வது அவதாரமாக கிருஷ்ண அவதாரம் உள்ளது.கிருஷ்ணர் பிறந்த கிருஷ்ண ஜென்மாஷ்டமி அதர்மம் எங்கெல்லாம் தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் நீதியை நிலைநாட்ட கிருஷ்ண பகவான் தோன்றுவார் என்ற அடிப்படை கருத்தின் அடிப்படையில் கிருஷ்ணர் பிறந்த இந்த கிருஷ்ண ஜென்மாஷ்டமி மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
வாசுதேவர் – வாசுகி தம்பதியினரின் 8வது மகனாக கிருஷ்ணர் பிறந்தார். இவர் அவரது மாமனான கம்சன் மன்னரின் அழிவுக்கு காரணமாக இருப்பான் என அசரீரி ஒலித்தது.
இதனால் நிறைமாத கர்ப்பிணியான வாசுகி – வசுதேவர் இருவரையும் கம்சன் சிறையில் அடைத்தான். ஆவணி மாதம் தேய்பிறையில் வரும் அஷ்டமி நாளில் ரோகிணி நட்சத்திரத்தில் சிறையில் நள்ளிரவில் கிருஷ்ணர் பிறந்தார்.விரத வழிபாடு, சிறப்பு பூஜை
இந்நாள் வெகுவிமரிசையாக விரத வழிபாடு, சிறப்பு பூஜை, பல்வேறு நிகழ்ச்சிகள் என கொண்டாடப்படுகிறது. காலையில் எழுந்து நீராடி, திலகம் அணிந்து கிருஷ்ணரை மனதார வழிபட வேண்டும். குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் (மூன்றே முக்கால் நாளிகை) அல்லது நாள் முழுதும் விரதம் இருப்பது நல்லது. முழுமையாக உணவு உட்கொள்ளாமல் இருக்க இயலாதவர்கள், அரிசி உணவைத் தவிர்த்து பழங்கள் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்ளலாம்.கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக ஐதீகம் என்பதால், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மாலை அல்லது இரவில் பூஜை செய்வது சிறந்தது. பாத கோலம்: வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை அரிசி மாவால் கிருஷ்ணரின் சிறிய பாதச் சுவடுகளை வரைய வேண்டும்.அலங்காரம்: கிருஷ்ணர் படத்திற்கு மஞ்சள் மலர்கள் மற்றும் துளசி இலைகளைச் சாற்றி வழிபட வேண்டும்.நைவேத்தியம்: கண்ணனுக்குப் பிடித்தமான வெண்ணெய், அவல், மற்றும் பலகாரங்களைப் படைக்க வேண்டும்.சிறப்பு நிகழ்வு: வீடுகளில் குழந்தைகளைக் கிருஷ்ணர் மற்றும் ராதை போல அலங்கரித்து மகிழலாம்

