இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் முன்னாள் செயலாளர் கிரிஷாந்த கபுவத்த ஆகியோர், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.தற்போது நடைபெற்று வரும் ஒரு விசாரணையின் ஒரு பகுதியாக, இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திடீர் பத…

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் முன்னாள் செயலாளர் கிரிஷாந்த கபுவத்த ஆகியோர், சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.தற்போது நடைபெற்று வரும் ஒரு விசாரணையின் ஒரு பகுதியாக, இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திடீர் பதவி விலகல்கள்.. அதிகாரிகளின் கூற்றுப்படி, விசாரணையில் உள்ள விடயங்கள் தொடர்பான 36 அம்சங்களைக் கொண்ட ஒரு கேள்வித்தாளுக்கு பதிலளிக்குமாறு குறித்த இரண்டு முன்னாள் பதவியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் விளையாட்டு நிர்வாக அமைப்பிற்குள் கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் ஆளுகை தொடர்பான பிரச்சினைகள் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில், இருவரும் தங்கள் பதவிகளிலிருந்து விலகியிருந்தனர். இந்நிலையில், அவர்கள் பதவி விலகி சில மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.