ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீண்ட காலம் பணியாற்றிய ஸ்டீபன் பிளெமிங், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்த முடிவு, சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் பிளெமிங் தரப்பு இடையே நடைபெற்ற கலந்தாலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவ…
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமைப் பயிற்சியாளராக நீண்ட காலம் பணியாற்றிய ஸ்டீபன் பிளெமிங், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இந்த முடிவு, சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் பிளெமிங் தரப்பு இடையே நடைபெற்ற கலந்தாலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ், இதுவரை ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.OFFICIAL ANNOUNCEMENTThe Super Kings and Head Coach Stephen Fleming have mutually decided to part ways.Together, we shared one of the most successful and enduring partnerships in IPL history. The legacy you've built will continue to inspire us.With immense respect and… pic.twitter.com/qjvb4oZUuU— Chennai Super Kings (@ChennaiIPL) July 13, 2026 மேலும், பல முறை பிளே-ஆஃப் சுற்றுக்கும், 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.
கடைசியாக 2023ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே, அதன் பின்னர் தொடர்ந்து மூன்று சீசன்களாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறியுள்ளது. இந்த நிலையில், தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகியுள்ளார்.
53 வயதான ஸ்டீபன் பிளெமிங், 2008ஆம் ஆண்டு தொடக்க ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வீரராக விளையாடினார். அதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு முதல் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்று, 2026 சீசன் வரை அந்தப் பொறுப்பில் தொடர்ந்தார். ஸ்டீபன் பிளெமிங் விலகல்
அவரது பயிற்சியின் கீழ் சிஎஸ்கே ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டத்தையும் வென்றுள்ளது. மேலும், 12 முறை பிளே-ஆஃப் மற்றும் 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு அணியை வழிநடத்தியுள்ளார். சிஎஸ்கே நிர்வகித்து வரும் தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ20 தொடரில் ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கும், அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பிளெமிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்துள்ளார்.
பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்த ஸ்டீபன் பிளெமிங், "18 ஆண்டுகள் என்பது என் விளையாட்டு வாழ்க்கையில் மறக்க முடியாத காலம். மிகுந்த நன்றியுடன் விடைபெறுகிறேன். பயிற்சியாளராக சிஎஸ்கேவுடன் இணைந்து பணியாற்றியது மிகச் சிறப்பான அனுபவம். நாங்கள் இணைந்து படைத்த சாதனைகள் குறித்து பெருமை கொள்கிறேன். அந்த நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்திருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.You May Like This..[

