தேசிய பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை காரணம் காட்டி, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் புதிய தலைமுறை மனித உருவ ரோபோக்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை மனித உருவ ரோபோக்கள் மட்டுமன்றி, நான்கு கால்களைக் கொண்ட மே…
தேசிய பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை காரணம் காட்டி, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் புதிய தலைமுறை மனித உருவ ரோபோக்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்தத் தடை மனித உருவ ரோபோக்கள் மட்டுமன்றி, நான்கு கால்களைக் கொண்ட மேம்பட்ட தானியங்கி இயந்திரங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சீனாவில் தயாரிக்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ரோபோட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போட்டியின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தரவு மையங்கள் மற்றும் சூரிய மின்சக்தி அமைப்புகளில் பயன்படுத்தப்படும் மின்சக்தி மாற்றிகள் (Power Inverters) இறக்குமதிக்கும் அமெரிக்க கூட்டாட்சி தகவல் தொடர்பு ஆணையம் (FCC) கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமெரிக்க பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உபகரணங்களாக இவை அமையக்கூடும் என்பதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக FCC தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீன தூதரகம், வர்த்தக விவகாரங்களை அரசியல்மயமாக்குவதை சீனா தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும், நியாயமற்ற தடைகளுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.







-558030_850x460.jpg)
-558031_850x460.jpg)
-558032_850x460.jpg)
-558033_850x460.jpg)
-558066_850x460.jpg)
