உலக சுகாதார அமைப்பு (WHO) சிகரெட்டுகளின் சில்லறை விலையில் குறைந்தபட்சம் 75 சதவீதத்தை வரியாக விதிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது. இலங்கை இறுதியாக 2018 ஆம் ஆண்டில் (74%) இந்த இலக்கை நெருங்கியது. ஆனால், அதன் பின்னர் அந்த இலக்கைத் தக்கவைக்கத் தவறியதுடன், 2025 ஆம் ஆண்டு முதல் வரிப்…
உலக சுகாதார அமைப்பு (WHO) சிகரெட்டுகளின் சில்லறை விலையில் குறைந்தபட்சம் 75 சதவீதத்தை வரியாக விதிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது.
இலங்கை இறுதியாக 2018 ஆம் ஆண்டில் (74%) இந்த இலக்கை நெருங்கியது. ஆனால், அதன் பின்னர் அந்த இலக்கைத் தக்கவைக்கத் தவறியதுடன், 2025 ஆம் ஆண்டு முதல் வரிப் பங்கு 67 சதவீதமாகக் குறைந்துள்ளது. சிகரெட்டுகளுக்கான வரிகள் உலக சுகாதார அமைப்பின் தர நிர்ணயத்தை விடக் குறைவாக விதிக்கப்பட்டதன் காரணமாக, 2025 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம் 25 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சாத்தியமான வரி வருமானத்தை இழந்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் இந்த வரி வருமான இழப்பு 8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகக் காணப்பட்டது.
நிதி இழப்புகளை நிமிட அடிப்படையில் கண்காணிப்பதற்காக, வெரிட்டே ரிசர்ச் (Verité Research) நிறுவனத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘Cigarette Tax Leakage Tracker’ (சிகரெட் வரி கசிவு கண்காணிப்பான்) என்ற புதிய இணையவழி டாஷ்போட் (online dashboard) மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

