மாறிவரும் உலக அதிகார ஒழுங்கில் கடல் வலுச் சமநிலை யார்பக்கம் இருக்கிறதோ அவர்களாலேயே உலக ஒழுங்கை தீர்மானிக்க முடியும். இன்று சமுத்திரங்களின் முக்கியத்துவம் என்றும் இல்லாதவாறு அதிகரிக்க தொடங்கிவிட்டது. இந்தப் பூமியில் உள்ள ஐந்து சமுத்திரங்களில் ஆட்டிக் மற்றும் அந்தாட்டிக் சமுத்திரங…
மாறிவரும் உலக அதிகார ஒழுங்கில் கடல் வலுச் சமநிலை யார்பக்கம் இருக்கிறதோ அவர்களாலேயே உலக ஒழுங்கை தீர்மானிக்க முடியும். இன்று சமுத்திரங்களின் முக்கியத்துவம் என்றும் இல்லாதவாறு அதிகரிக்க தொடங்கிவிட்டது. இந்தப் பூமியில் உள்ள ஐந்து சமுத்திரங்களில் ஆட்டிக் மற்றும் அந்தாட்டிக் சமுத்திரங்கள் உறை பனிச்சமுத்திரங்கள் என்பதனால் அவை பெரும் முக்கியத்துவம் பெறவில்லை. இலங்கையின் சர்வதேச அடையாளம் ஆனால் பசுபிக், அட்லாந்திக் மற்றும் இந்து ஆகிய மூன்று சமுத்திரங்களையும் இணைக்கின்ற சமுத்திரமாக இந்து சமுத்திரம் அமைவதனால் அதன் முக்கியத்துவம் இன்றியமையாதது. இத்தகைய இந்து சமுத்திரத்தின் வடக்கு தெற்காகவும் கிழக்கு மேற்காகவும் பிரிக்கின்ற பகுதியின் மையப்பகுதியை அண்டி இலங்கைத் தீவு இருப்பதனால் அதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டுதான் சிங்கள தேசத்தின் ராஜதந்திரி Chevaan Daniel “Indian Ocean” என்பதற்குப் பதிலாக “Lanka Ocean” என்று அழைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.அது சிங்கள தேசத்தின் விருப்பமும் கூட.
இந்த சமுத்திரத்தை லங்கா சமுத்திரம் என்று அழைக்கப்பட வேண்டும் என்ற சிங்கள தேசத்தின் விருப்பை வெளிப்படுத்துவதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட The Colombo Conversation 2026 நிகழ்ச்சியில் Chevaan Daniel ஆற்றிய உரையின் காணொளி Newsfirst Englishஇல் வெளியாகியுள்ளது. அவரது உரையில் இலங்கைத் தீவை வெறும் சுற்றுலாத் தலமாகப் பார்க்கக்கூடாது. பொதுவான பார்வையில் இலங்கையின் சர்வதேச அடையாளம் பெரும்பாலும் அழகான கடற்கரைகள், இயற்கை, வனவிலங்குகள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் சுற்றுலா ஆகியவற்றோடு இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், இலங்கையின் உண்மையான ஆற்றல் இதைவிட மிகவும் விரிவானது என குறிப்பிட்டுள்ளார். இந்த “Brand Sri Lanka” என்பது சுற்றுலா விளம்பரமோ அல்லது ஒரு சின்னமோ அல்ல. அது எங்கள் நாட்டின் மக்கள், திறமை, கலாசாரம், படைப்பாற்றல், தொழில், நம்பகத்தன்மை, மதிப்புகள் மற்றும் உலகத்துடனான உறவு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.நாட்டின் சர்வதேசப் பிம்பம்இலங்கையின் மிகப்பெரிய புவியியல் இருப்பிடத்தை முன்னிறுத்தி இலங்கை உலகிற்கு சுற்றுலாப் பயணிகளை மட்டுமல்லாமல், "Made in Sri Lanka” என்ற அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டும். ஒரு நாட்டின் சர்வதேசப் பிம்பத்தை உருவாக்குவதில் கதைசொல்லலும் ஊடகமும் முக்கியமானவை. இலங்கை தன்னைப் பற்றிய கதையை உலகம் எவ்வாறு கேட்க வேண்டும் என்பதைத் தானே தீர்மானித்து, சர்வதேச ஊடகங்கள் மற்றும் புதிய டிஜிட்டல் தளங்கள் மூலம் கொண்டு செல்ல வேண்டும்.இலங்கையின் விருப்புக்கள், கருத்தியல்கள், வாய்ப்பக்கள் மற்றும் பார்வைகளை பரந்த Lanka Ocean-Pacific பிராந்தியத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பை உருவாக்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திரம் உலகின் மூன்றாவது பெரிய நீர்ப்பரப்பாகும். இது 73.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. ஆசியா மற்றும் ஆபிரிக்கா ஆகிய கண்டங்களிலும் இந்துசமுத்திர கரையில் 38 நாடுகள் உள்ளன. 8 நாடுகள் இந்து சமுத்திர துறைமுகங்களை அண்டி பிழைக்கும் நாடுகளாக உள்ளன. இப்போது இந்து சமுத்திரத்தில் சீனாவும் துறைமுகங்களை பெற்றுக்கொண்டுள்ளது என்ற அடிப்படையில் எல்லாமாக இந்து சமுத்திரத்தில் 47 நாடுகள் உள்ளன.நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம்மேற்குலக வல்லரசுகளான பிரான்சும், பிரிட்டனும், அமெரிக்காவும் இந்து சமுத்திரத்தில் தங்களுக்கான தீவுகளைக் கொண்டுள்ளன என்ற அடிப்படையில் மொத்தமாக 50 நாடுகள் நேரடியாக இந்து சமுத்திரத்தை பங்குபோடும் நாடுகளாகவும் அதன் வளங்களை அனுபவிக்கும் நாடுகளாகவும் உள்ளன.
இந்த வகையில் இந்து சமுத்திரத்தை பங்கு போடுகின்ற நாடுகளில் 10 சிறிய தீவுநாடுகள் உள்ளன. இந்த தீவுநாடுகளில் இலங்கை தீவு மாத்திரமே மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீவாக முன்னிலையிலுள்ளது.அதே நேரத்தில் இலங்கை ஐரோப்பிய காலனித்துவ காலத்திலும் முக்கியத்துவம் பெற்ற தீவாக இருந்தது என்பதற்கு உலகளாவிய ஆதிக்க போட்டியில் ஈடுபட்ட ஐரோப்பிய நாடுகள் 17ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் யுத்தத்தில் ஈடுபட்டு தோல்வி அடைந்திருந்த நிலையில் பிரான்சின் ஏமியன் நகரில் 27-03-1802 அன்று ஏமியன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பாட்டேவியக் குடியரசு(நெதர்லாந்து) ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த ஒப்பந்தம், ஐரோப்பாவில் தற்காலிகமான அமைதியை ஏற்படுத்தியது. போரின்போது தான் கைப்பற்றிய பல பிரெஞ்சு, ஸ்பானிய மற்றும் டச்சுப் பிரதேசங்களை பிரிட்டன் திருப்பி கைளித்தது. பிரிட்டன் இலங்கைய(Ceylon) மற்றும் கரீபியன் கடலில் டிரினிடாட் (Trinidad) ஆகிய இரண்டு தீவுகளையும் பிரிட்டன் தன்வசம் வைத்துக் கொண்டது. காரணம் இந்து சமுத்திரத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கு இலங்கைத் தீவு இன்றியமையாது என்பதை அன்றைய பிரிட்டன் உணர்ந்து இருந்தது.பாக்கு நீரிணைஇந்தத் தீவை கைப்பற்றுவதற்கு நெப்போலியன் முயற்சித்தார். “இலங்கைத் தீவின் திருகோணமலை துறைமுகத்தை என்னிடம் தந்து விடுங்கள் இந்த உலகத்தை நான் ஆள்வேன்“ என அவர் குறிப்பிட்டதாக கூறப்படும் வரலாற்று குறிப்புகளும் உள்ளது.
ஏமியன் உடன்படிக்கை 14 மாதங்கள் மட்டுமே நீடித்தது. அதன் பின்னர் 1803 மே மாதத்தில் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே மீண்டும் போர் வெடித்தது. நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பிறகு 1814 மே 30 அன்று கையெழுத்தான முதலாம் பரிஸ் உடன்படிக்கை (First Treaty of Paris) மற்றும் வியன்னா மாநாடு (Congress of Vienna - 1815) மூலமாக மீண்டும் தன்வசம் பெற்றுக்கொண்டது.இந்து சமுத்திரத்திலுள்ள இலங்கைத் தீவை பிரிட்டன் தன்வசம் வைத்திருந்தபடியினால்தான் ஆசியா, ஆப்பிரிக்காவில் உள்ள தனது காலணிய நாடுகளை பாதுகாத்தது மாத்திரமல்ல இந்து சமுத்திரத்தினுள் பிரான்சியர்கள் ஆதிக்கம் செலுத்த முடியாமல் தடுக்க முடிந்தது.
இத்தகைய உலாகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத்தீவு ஈழத் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் தாயக பூமியாக மாத்திரமல்ல அது இரண்டு பகுதியினரும் பங்குபோட்டு வாழ்ந்த நிலப்பகுதியாகும். அதேநேரத்தில் இலங்கைத்தீவு இந்திய துணைக்கண்டத்தில் இருந்து பாக்கு நீரிணையினால் பிரிக்கப்பட்டிருப்பதுதான் இலங்கைத்தீவின் பாதுகாப்பும், பலமுமாகும்.பௌத்தமும் சிங்களமும்கடந்த 2500 ஆண்டுகால வரலாற்றில் பௌத்தமும், சிங்கள இனமும் தமது சுயாதீனத்தை தொடர்ந்து பேணுகிறார்கள் என்றால் அது தீவாக இருப்பதால்தான். பாக்குநீரினை இல்லையேல் இன்று இலங்கை தீவில் பௌத்தம் முற்றாக இல்லாமல் போயிருக்கும். கி.பி.4ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் பலம்வாய்ந்த மதமாக இருந்த பௌத்தம் இன்றில்லை.காரணம் தமிழகம், இந்திய பெருங்கண்டத்தின் தென்கோடியில் நிலத் தொடர்பால் இணைக்கப்பட்டிருந்தமையால் அது வடக்கின் இந்து மதத்தின் செல்வாக்குக்கு உட்பட்டு பௌத்தமதம் இல்லாது ஒழிந்துவிட்டது. ஆனால் இலங்கை தீவாக இருப்பதும், அது பார்குநீரிணையால் பிரிக்கப்பட்டிருப்பதும் இலங்கைத்தீவில் பௌத்தத்தை தொடர்ந்து பேண முடிந்ததோடு, சிங்கள மொழியையும் தொடர்ந்து வளர்த்தெடுக்க முடிந்துள்ளது. இது இலங்கை தீவாக அமைந்துள்ளமைதான் பௌத்த சிங்கள மக்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதமாகும்.
சிங்களவர்களை பொறுத்தளவில் பாக்குநீரினை என்பது ஒரு நச்சு ஆறாகவும் அதேநேரத்தில் அது ஒரு பால் ஆறாகவும் இரண்டு முகங்களைக் கொண்டது.பண்பாட்டு அம்சங்கள்பாக்குநீரினையால் இலங்கைத்தீவு பிரிக்கப்பட்டிருப்பது சிங்களவர்களுக்கு பாக்குநீரினை பாலாறு, அதுவே அவர்களை காக்கின்ற பாதுகாப்பரணகாவும் பாதுகாப்பு அகழியாகவும் உள்ளது. ஆனால் பாக்குநீரிணையின் இந்தியக் கரையில் தமிழகத் தமிழர்களும், இலங்கையின் வடகிழக்குக் கரைகளில் ஈழத்தமிழர்களும் வாழ்வதும், இரண்டு கரை மக்களும் ஒரே பண்பாட்டு அம்சங்களோடு வாழ்வதும், பரஸ்பர தொடர்பாளர்களுடன் வாழ்வதும் இந்தப் பாக்குநீரை சிங்களவர்களின் கண்களுக்கு நச்சு ஆறாக தோன்றுகிறது.
அதே நேரத்தில் இருகரையிலும் தமிழ் பேசும் மக்கள் வாழ்வது ஈழத்தமிழர்களுக்கு தேன் ஆறாகவும் தமிழர்களின் நீச்சல் தடாகமாகவும், பண்பாட்டுப் போக்குவரத்து பாலமாகவும் காணப்படுகிறது. பாக்குநீரிணையின் இலங்கைத்தீவுக் கடற்கரையில் உள்ள ஈழத்தமிழர்களை அழித்துவிட்டால் இலங்கைத் தீவின் சுயாதீனத்தை தொடர்ந்து பாதுகாக்க முடியும் என சிங்கள தேசம் நம்புகிறது. அதனை மகாவம்சம் என்ற புணைகதை நூலில் 2,500 ஆண்டு கால வரலாற்றை எழுதுகையில் இந்திய எதிர்ப்பை மையப்படுத்தியே வரலாற்றை எழுதியுள்ளனர். அது சிங்கள மக்களின் பண்பாட்டிலும், வரலாற்றிலும், வாழ்வியலிலும், ஒவ்வொரு சிங்கள மக்களின் சிந்தனையிலும், அவர்களுடைய கருத்து மண்டலத்திலும் இந்திய எதிர்ப்பும், தமிழின எதிர்ப்பும் வலுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தக் கருத்து மண்டலத்தில் இருந்து சிங்கள மக்களை விடுவித்துவிட முடியாது.
இந்த நிலையில் ஈழத் தமிழர்களை அழிப்பதனையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு ஈழத்தமிழர்களை இந்தியாவிடமிருந்து பிரித்து வைப்பதில் வெற்றி பெற்றுவிட்டது.தேசிய இனங்கள்அவர்களடைந்த வெற்றியை மேலும் வெற்றியாக்க கூடிய வகையில் ஈழத் தமிழர்களிடையேயும் இந்திய எதிர்ப்பு சற்று தலை தூக்கி விட்டது. அத்தகைய எதிர்ப்பை இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன தனது ராஜதந்திரத்தை பயன்படுத்தி வெற்றிகரமாக செய்து முடித்து விட்டார். ஈழத் தமிழர்களை இந்தியாவிடமிருந்து பிரித்ததில் ஜே.ஆர் அடைந்த வெற்றி என்பது சிங்கள சமூகத்தின் அறிவியல் வளர்ச்சியின் கொள்ளளவையும், ராஜதந்திர முதிர்ச்சியின் உச்சத்தையும் வெளிகாட்டி நிற்கிறது.
இலங்கை தீவின் வரலாற்றில் மொழிவழி தேசிய இனங்கள் இரண்டும் தமக்கான அரசை பதினாறாம் நூற்றாண்டு வரை வைத்திருந்தார்கள். இலங்கைத் தீவின் மீது இந்திய பேரரசர் அசோகர் பௌத்த மதம் படையெடுத்த போதும் வட கிழக்கு தமிழர்கள் அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கவில்லை. பௌத்தத்தை வடக்கிலே வரவேற்று அதனை தெற்கே சிங்களவர்கள் பக்கம் செல்வதற்கு வழிவிட்டார்கள். அதன் மூலம் பௌத்தம், சிங்கள தேசத்தில் நிலைபெற்றது. அதேபோல பின்னாட்களிலே சேர சோழர் கலிங்கர்கள் படையெடுத்தபோதும் அந்த இந்திய மன்னர்களுக்கு எதிராக ஈழத்தமிழ் மன்னர்கள் வாலேந்தவில்லை. அவர்களை வரவேற்று தெற்கு நோக்கி செல்ல வழிகாட்டி அனுப்பினர். இலங்கை வரலாற்றில் தமிழ் மன்னர்கள் யாரும் இந்திய மன்னர்களுடன் போரிட்ட வரலாற்றுச் செய்தியை நீங்கள் எங்கேயும் பார்க்க முடியாது. காரணம் தமிழ் மொழி பேசும் மன்னர்களுடன் ஈழத்தமிழ் மன்னர்கள் யாரும் போரிடவில்லை என்ற உண்மை புலப்படும்.படையெடுப்புகள்
தென்னிந்திய மன்னர்களுடன் ஈழத்தமிழர்கள் போரிடாமையும், அவர்களுடன் நட்புரிமை பாராட்டியமையும்தான் மகாநாம தேரர் இந்திய படையெடுப்பை எதிர்ப்பதோடு அந்தப் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நட்பு உறவு கொண்ட ஈழத் தமிழர்களையும் சிங்களவர்களுடைய பொது எதிரியாக வகைப்படுத்தி இந்திய ஆக்கிரமிப்பின் கருவிகளாக ஈழத் தமிழர்கள் உள்ளார்கள் என்பதனால் அவர்களை இந்த தீவில் இருந்து அகற்ற வேண்டும் என்ற இலட்சிவாத நோக்கிலேயே மகாவம்சம் என்ற நூல் எழுதப்பட்டது. அதனால்தான் அந்த நூலிலே தம்ம தீபக் கோட்பாடு வலுவாக வரையப்பட்டது. இலங்கை தீவு பௌத்தத்துக்கே சொந்தம் என்றும், இலங்கைத் தீவு விஜயனும் அவனுடைய சந்ததிகளுக்கு உரித்தானது என்றும், இலங்கை அரசு சிங்கள பௌத்தர்களுக்கே உரித்தானது என்றும் அவர் தனது விருப்பு வாதத்தை இலட்சிய வாதமாக மனதிலே பதிய வைத்திருக்கிறார்.இந்த வரலாற்று பின்புலத்திலிருந்து ஈழத் தமிழர்கள் தம்மை இலங்கை தீவில் பாதுகாப்பதற்கான மூலபாயங்களை வகுக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் கடல் சார்ந்த கொள்கையில் மிகவும் பின்னோக்கியுள்ளார்கள். ஆனால் சிங்களவர்கள் முன்னேறியுள்ளார்கள் என்பதனை “லங்கா சமுத்திரம்“ என இந்து சமுத்திரத்திற்கு பெயர் மாற்ற வேண்டும் என்று குரல் எழுப்பும் அளவிற்கு வளர்ந்திருப்பதன் ஊடாக அறியலாம்.
இறுதியாக யாழ்ப்பாண இராச்சியம் 1619-1621களில் போர்த்துக்கேயர் முற்றுகையிடப்பட்டு வீழ்ச்சி அடையும் தருவாயில் தென்னகத்தின் சேதுபதி மன்னர்களும் குஞ்சலி மரைக்காயர்களும் ஈழத் தமிழர்களுக்கு கைகொடுக்க படைகளை அனுப்பினார்கள்.யாழ்ப்பாண ராச்சியம் ஆயினும் தொடர்ந்து யாழ்ப்பாண ராச்சியத்திற்கு வழங்களை செய்வதற்கு போர்த்துக்கேய கடற்படை பாக்குநீரணையில் தரித்து நின்று தென்னிந்திய தொடர்பை துண்டித்தமையே யாழ்பாண ராச்சியம் வீழ்ச்சியடைந்தமைக்கான முக்கிய காரணமாகும். ஆகவே தமிழர்களுடைய இறைமை தோற்கடிக்கப்பட்டது தரையில் அல்ல கடலிலேதான். ஈழத்தினுடைய இறையாண்மை பாக்கு நீரிணையின் அடையாளத்திலேயே வீழ்த்தப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. எங்கு ஈழத்தமிழனுடைய இறையாண்மை புதைக்கப்பட்டுள்ளதோ, எங்கு வீழ்த்தப்பட்டதோ அங்கிருந்துதான் ஈழத்தமிழரின் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டும்.பாக்கு நீரிணையும், இந்து சமுத்திரமும்தான் ஈழத் தமிழர்களுடைய பலம். தமிழர்களுடைய சனத்தொகை என்பது இலங்கைத் தீவில் மிகச்சிறியது. ஆனால் சிறிய தொகை ஈழத் தமிழர்கள் இலங்கை தீவின் பாக்குநீரிணை கடற்கரையில் முழுமையாகவும், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமுத்திரக்கரையின் பெரும்பகுதியையும் தமது தாயக நிலப்பகுதியாகக் கொண்டிருப்பதுதான் ஈழத்தினுடைய பலமாகும். ஈழத் தமிழர்கள் வாழ்கின்ற அந்த சிறிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பே ஈழத் தமிழர்களுக்கான சர்வதேச முக்கியத்துவத்தையும், இந்து சமுத்திர அரசியலில் பங்கையும் பாத்திரத்தையும் கொடுக்கிறது என்பதை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.பாக்குநீரிணையின் முக்கியத்துவம்இந்தப் புரிதலில் இருந்து கொண்டுதான் ஈழத் தமிழர்கள் தனது புவிசார் அரசியலையும் பூகோள அரசியலையும் வழிநடத்த வேண்டும்.
ஈழத்தமிழர்கள் பாக்கு நீரணையில் இழந்து போன இறைமையை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தை தெரிந்தோ தெரியாமலோ ஆரம்பித்துள்ளனர்.ஆயினும் ஈழத் தமிழர்கள் பாக்குநீரிணையின் முக்கியத்துவத்தை தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை என்ற துயரகரமான உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் புரிதல் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படாததன் விளைவுதான் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்தமைக்குக் காரணம்.ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்தது முள்ளிவாய்க்கால் மண்ணில் அல்ல. போராட்டம் தோல்வி அடைந்தது முதலாவது பாக்கு நீரிணையிலும் இறுதியாக தோல்வியடைந்தது இந்து சமுத்திரத்திலும் ஆகும். மொத்தத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்தது தரையில் அல்ல அது கடலில்தான். இந்த தத்துவார்த்த உண்மை புரியாத வரைக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தோல்வியிலிருந்து மீட்டெடுக்க முடியாது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் பின்தளமாக ஆரம்ப காலத்தில் தமிழகமே இருந்து வந்தது. தமிழகத்தின் பின் தளத்தை ஈழத்தமிழர்கள் இழந்த பின்னரும் பாக்குநீரிணையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளவில்லை.அவற்றில் மூன்று கப்பல்களை தவிர ஏனைய கப்பல்கள் உலகின் பலம் வாய்ந்த நாடுகளின் தாக்குதல்களினாலேயே அழிக்கப்பட்டன.தமிழிழ விடுதலை போராட்டம்மூன்று கப்பல்கள் மாத்திரமே இலங்கை கடற்படையால் அழிக்கப்பட்டது என்ற உண்மையை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழிழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் தோல்வி என்பது கடலிலே என்றால் நாம் அந்த கடலை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பற்றி முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.விடுதலைப் போராட்டம் இந்து சமுத்திரத்தின் அடையாளத்தில் புதைக்கப்பட்டு விட்டது என்றால் அங்கிருந்துதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மீட்டெடுக்க வேண்டும். ஆகவே ஈழத் தமிழர்கள் கடலை கையாள கற்றுக்கொள்ளவில்லை என்றால் வெற்றிக்கான பாதையை நாம் கண்டறியவில்லை என்பதே அர்த்தமாகும். கடலை நம் கைக்குள் கொண்டுவர முடியவில்லை என்றால் ஈழத் தமிழர்களுக்கு இலங்கை தீவில் எதுவும் மிஞ்சாது.
கடல்தான் ஈழத் தமிழர்களைக் காக்க வல்ல கவசம். ஆகவேதான் இப்போது சிங்கள தேசம் இந்து மகாகடலை “லங்கா கடலாக“ அறிவிக்க முனைப்பு காட்டுகின்றது. இந்த நேரத்திலாவது ஈழத் தமிழர்கள் விழித்துக் கொள்ளவேண்டும். முதன் முதலில் சமுத்திர அரசியலை ஆரம்பித்தவர்கள் தமிழர்கள். அந்தத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் இந்த 21ஆம் நூற்றாண்டில் கடல் பற்றிச் சிந்திக்கவில்லையாயின் நாம் அறிவியலில் மாத்திரமல்ல அரசியலிலும் தோல்வியடைந்த சமூகமாகவே விழுந்து கிடப்போம். மாறாக ஈழத் தமிழர்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுக்க முடியும் என்றால் தமிழ் மக்களின் இறையாண்மை புதைக்கப்பட்டிருக்கும்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8












