சிறைச்சாலை ஆடைகளை அணிவதற்கு முன்னர் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயற்படுவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட…

சிறைச்சாலை ஆடைகளை அணிவதற்கு முன்னர் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயற்படுவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன பத்மகுமார தெரிவித்துள்ளார்.

பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போது நம் நாட்டில் உள்ள எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு மாத்திரமே காத்திருக்கின்றனர்.காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்

வீடுகளில் கிளிகள், புறாக்கள் என செல்லப்பிராணிகளை மக்கள் கூடுகளில் வைத்து வளர்ப்பார்கள்.

அவை உணவு உண்ணும் போது அவற்றின் கூடுகளில் இருந்த உணவுகள் கீழே சிதறி விழும்.

இவ்வாறு விழும் உணவுகளுக்காகவே கூண்டுக்கு கீழே சிலப் பிராணிகள் காத்திருக்கும்.அப்படித்தான் இன்று நம் நாட்டில் இருக்கும் எதிர்க்கட்சியும்.

அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக சந்தர்ப்பங்களை நோக்கிக் காத்திருக்கின்றனர்.

தற்போதைய வெள்ளை ஆடைகளை களைந்து, சிறைச்சாலை ஆடைகளை அணிவதற்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்று அவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.