நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த அதிகாரிகள் இருவரில் ஒருவர் திங்கட்கிழமை (13) இரவு உயிரிழந்ததுடன், மற்றைய அதிகாரி செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள், அம்பலங்கொட பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய அதிகாரியும், லுணுகம்வெஹெர பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய அதிகாரியும் ஆவர். இச்சம்பவம் காரணமாக, உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது என்பதைப் பொலிஸார் மேலும் உறுதிப்படுத்தியுள்ளனர்.