சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்கள் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரைக் குறைகூறுவது எந்த வகையிலும் நியாயமற்றது என்று முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் குறித்து நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்…
சிறைச்சாலைகளில் ஏற்படும் மோதல்கள் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரைக் குறைகூறுவது எந்த வகையிலும் நியாயமற்றது என்று முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரம் குறித்து நேற்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரின் திட்டமிட்ட செயலல்ல, அது கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு உள்முரண்பாடு என்பதே உண்மையாகும்.
சிறைச்சாலையின் உள்ளே ஒரே அறையில் அல்லது வார்டில் நூற்றுக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு ஒன்றாக வாழும் சூழலில், இவ்வாறான மோதல்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றேயாகும்.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இத்தகைய சம்பவங்கள் இன்றும் அல்லது நாளையும் கூட மீண்டும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை மறுக்க முடியாது. நானும் கடந்த காலங்களில் வெலிக்கடை மற்றும் அகுனுகொலபெலஸ்ஸ போன்ற சிறைச்சாலைகளில் கைதியாக இருந்தவன் என்ற ரீதியில் இந்த அனுபவங்களை நன்கு அறிவேன். அதே போலவே நானும் இவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்ட அறை ஒன்றிலேயே அடைக்கப்பட்டிருந்தேன்.
மேலும்,சிறைச்சாலை மோதல்கள் மற்றும் அங்குள்ள நிலமைகள் குறித்து சமூகத்தில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் அங்கு போதிய வசதிகள் இல்லை என்று கூறும் அதேவேளை, இன்னும் சிலர் சிறைச்சாலை என்பது ஐந்து நட்சத்திர ஹோட்டல் அல்ல என்றும் வாதிடுகின்றனர்.
இதேவேளை, இந்த சம்பவத்திற்கு ஒரு அரசாங்கமாகவோ அல்லது அமைச்சராகவோ பொறுப்பேற்றுக் கொண்டமை பாராட்டுக்குரியது என்பதை மறுக்க முடியாது.
இதற்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் போன்ற பெரிய பேரழிவுகளுக்குக் கூட யாரும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், இந்த சம்பவத்திற்குப் பொறுப்பான அமைச்சர், 'நான் இதற்குப் பொறுப்பேற்கிறேன்' என்று தைரியமாக முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியது.
வெளிநாடுகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்குரிய தலைவர்கள் பொறுப்பேற்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோன்று உள்நாட்டில் இந்த அமைச்சர் பொறுப்பேற்றுக் கொண்ட துணிச்சலான மற்றும் நேர்மையான குணத்தை நான் மதிக்கின்றேன் என்றும் ரஞ்சன் ராமநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

