விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்ந்தும் அங்குணுகோலபெலஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, குறித்த சிறைச்சாலையின் பெண் பிரிவில் உள்ள ஏனைய கைதிகளுடன் பழகாதவாறு தனிச் சிறைய…

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்ந்தும் அங்குணுகோலபெலஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, குறித்த சிறைச்சாலையின் பெண் பிரிவில் உள்ள ஏனைய கைதிகளுடன் பழகாதவாறு தனிச் சிறையில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது குறித்த சிறைச்சாலையில் 130 இற்கும் மேற்பட்ட பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. செவ்வந்தியின் பரிதான நிலைஅத்துடன், கனேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய தொடர்புடைய சிலரும் ஆண் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.எனினும், இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டாலும், சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு மட்டுமே இவ்வாறான விசேடமான இடம் வழங்கப்பட்டுள்ளது.

வழமையாக கைதிகள் காலை 6 மணிக்குச் சிறைக் கூண்டுகளிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படுவதுடன், அவர்கள் மீண்டும் மாலை 4 மணியளவில் தான் அறைகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

எனினும், விசேட பாதுகாப்பின் கீழ் தனிச் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட தனிமைப்படுத்தப்பட்ட எந்தவொரு கைதிக்கும் இந்த வசதி கிடைக்காது.

இஷாரா செவ்வந்தி காலை 6 மணிக்குச் சிறைக் கூண்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படுவார். காலை உணவளிக்கப்பட்ட பின் மீண்டும் 15 நிமிடங்களுக்கு பின்னர் சிறைக் கூண்டிலேயே தங்க வைக்கப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தீவிர கண்காணிப்புஅவர் மீண்டும் வெளியே அழைத்துச் செல்லப்படுவது மதிய உணவு வழங்குவதற்காக 15 நிமிடங்களுக்கு மாத்திரமே ஆகும்.

சிறைச்சாலையில் உணவு சமைத்துப் பரிமாறும் நேரத்திலேயே இஷாரா செவ்வந்தி இவ்வாறு வெளியே அழைத்துச் செல்லப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மீண்டும் சிறைக் கூண்டில் வைக்கப்படும் இஷாரா செவ்வந்தி, இரவு உணவு வழங்குவதற்காகவே மாலை 4 மணிக்கு வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார்.

இது தவிர, காலை 6 மணிக்கும் மாலை 5 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் தினசரி 30 நிமிடங்கள் இஷாரா செவ்வந்தி வெளியே அழைத்துச் செல்லப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உடற்பயிற்சி செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்காகவே இது மேற்கொள்ளப்படுகிறது. அதற்கமைய, சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ், ஏனைய கைதிகளுடன் பழகாதவாறு சந்தேகநபருக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இஷாரா செவ்வந்திக்கு சிறைச்சாலைக்குள் விசேட சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என சிறைச்சாலை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் குறித்த சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் தனது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியுள்ளார். அங்குணுகோலபெலஸ்ஸ சிறைச்சாலையானது இஷாரா செவ்வந்தியின் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது.

அது நடைமுறையிலுள்ள சிறைச்சாலைச் சட்டத்திற்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எந்தவொரு கைதியும் மாதத்திற்கு இருமுறை சிறைச்சாலை ஊடாக தொலைபேசி அழைப்புகளைப் பெற்றுக் கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட கைதி அது தொடர்பிலான கோரிக்கையை முதலில் சிறைச்சாலையிடம் முன்வைக்க வேண்டும்.

அதற்கமைய, சிறைச்சாலை அதிகாரிகளின் கடுமையான கண்காணிப்பின் கீழ் குடும்ப உறுப்பினர்களுடன் தொலைபேசியில் பேசுவதற்கு இரண்டு நிமிடங்கள் மாத்திரமே கால அவகாசம் கிடைக்கும் என சிறைச்சாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.