நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இன்று புதன்கிழமை 68 கைதிகள் குருவிட்ட சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் சிறைச்சாலை பஸ்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து செல்லப்பட்ட நிலையில், இன்றைய தினம் சிறைச்சாலைக்கு அண்மித்ததாக வீதி ஓரத்தில் கைதிகளின் உறவினர்கள்…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இன்று புதன்கிழமை 68 கைதிகள் குருவிட்ட சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இவர்கள் சிறைச்சாலை பஸ்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து செல்லப்பட்ட நிலையில், இன்றைய தினம் சிறைச்சாலைக்கு அண்மித்ததாக வீதி ஓரத்தில் கைதிகளின் உறவினர்கள் திரண்டிருந்தனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்களுடைய பெயர் பட்டியலை பொலிசார் உறவினர்களுக்கு தெரிவித்தனர். நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அருகில் எவரும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பதுடன் பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

