சிரியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் கிமேமிம் மற்றும் டார்ட்டஸ் இராணுவ தளங்களின் செயற்பாடுகளை மாற்றியமைப்பது தொடர்பில் சிரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக சிரிய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. சுமார் 18 மாத கால தீவிர…

சிரியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் கிமேமிம் மற்றும் டார்ட்டஸ் இராணுவ தளங்களின் செயற்பாடுகளை மாற்றியமைப்பது தொடர்பில் சிரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக சிரிய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

சுமார் 18 மாத கால தீவிர பேச்சுவார்த்தைகளின் பின்னர் எட்டப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையின் கீழ், கிமேமிம் விமான நிலையம் மற்றும் டார்ட்டஸ் துறைமுகத்தின் நான்காவது வர்த்தக முனையம் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டு மையங்களின் நிர்வாகத்தை சிரியா பொறுப்பேற்கவுள்ளது.புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த மையங்கள் படிப்படியாக சிரியாவின் பொதுமக்கள் நிர்வாக கட்டமைப்பின்கீழ் கொண்டுவரப்படவுள்ளன.

அத்துடன், குறித்த பகுதிகளில் அமைந்துள்ள இராணுவ தளங்கள் மற்றும் வசதிகள் கூட்டுப் பயிற்சி மையங்களாக மாற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாற்ற நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காக அதிகபட்சமாக மூன்று மாத கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதன்பின்னரே புதிய நடைமுறைகள் முழுமையாக நடைமுறைக்கு வரும்.

இந்த ஒப்பந்தமானது பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்து எட்டப்பட்ட மிக முக்கியமான நகர்வு எனவும், இது சிரியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளதாகவும் சிரிய வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.