இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள அரசாங்க பாடசாலை ஒன்றில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் சிறுநீர் கலந்த தண்ணீரைக் குடிக்கக் கொடுத்ததாக இரு சிறுமிகள் முறைப்பாடு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரோன் வட்டாரப…

இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள அரசாங்க பாடசாலை ஒன்றில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் சிறுநீர் கலந்த தண்ணீரைக் குடிக்கக் கொடுத்ததாக இரு சிறுமிகள் முறைப்பாடு அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரோன் வட்டாரப் பகுதியில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடிநீரில் ஏதோ கலந்திருப்பதை அறிந்து சிறுமிகள் இருவரும் உடனடியாகப் பாடசாலை அதிபரிடம் சென்று முறைப்பாடு அளித்துள்ளனர்.சாக்லேட் சாப்பிட கூறிய அதிபர்

எனினும் அதிபர் அதை தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல், "வாய் ஒருமாதிரியாக இருந்தால் 10 ரூபாய் கொடுத்து சாக்லேட் வாங்கிச் சாப்பிடுங்கள்" என மிகவும் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை தகவலறிந்த சிறுமிகளின் பெற்றோரும் கிராம மக்களும் ஆத்திரமடைந்து பாடசாலைக்கு பூட்டுப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டு அதிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

குணா மாவட்ட ஆட்சியர் கிஷோர் குமார் கன்யால் இந்த சம்பவம் குறித்துத் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தவறிழைத்த மாணவன் மற்றும் அவனது பெற்றோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முறைப்பாட்டைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாகப் பதிலளித்த அதிபருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அரோன் துணைப் கோட்டாட்சியர் மஞ்சுஷா கத்ரி தகவலின்படி, வட்டாட்சியர் மற்றும் வட்டாரக் கல்வி அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 2 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், கனத்த பொலிஸ் பாதுகாப்புடன் சிறுமிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் மேலும் சில ஆண் மாணவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5