தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறுபான்மைக் கட்சிகள், தமது உரிமைகளுக்காகத் தனியானதொரு புதிய கூட்டணியை உருவாக்குவதில் எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங…

தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறுபான்மைக் கட்சிகள், தமது உரிமைகளுக்காகத் தனியானதொரு புதிய கூட்டணியை உருவாக்குவதில் எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களிடம் மேலும் கூறுகையில்,

"மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் தங்களின் உரிமைகளுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் தனியாக ஒழுங்கமைவதில் தவறில்லை. அரசின் நிர்வாகக் குறைபாடுகள் அவர்கள் அனைவரும் தொடர்ந்தும் எமது ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்துதான் பயணிக்கின்றனர். தற்போதைய மக்கள் விரோத அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்குக்காக, எதிர்காலத் தேர்தல்களில் அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து செயற்படும் என்பதில் எமக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். இதன்போது நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் அரசின் நிர்வாகக் குறைபாடுகள் குறித்தும் அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஆதிக்கம் தொடர்பில் சுட்டிக்காட்டிய அவர், அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் அரசின் நிர்வாகச் சீர்குலைவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார். தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல்சிறைக்குள் வன்முறை வெடித்தபோது, உரிய நேரத்தில் பொலிஸாரின் உதவியைப் பெறவோ அல்லது முறையான முடிவுகளை எடுக்கவோ சிறைச்சாலை நிர்வாகத்துக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. இக்கட்டான சூழலில் நீதி அமைச்சரைத் தொடர்புகொள்ள அதிகாரிகள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இதுவே இந்த அரசின் நிர்வாகக் கட்டமைப்பு சிதைந்துள்ளதற்கான சான்று என்று அவர் சாடியுள்ளார்.

அரசின் தற்போதைய நிலைப்பாடு குறித்துப் பேசிய திஸ்ஸ அத்தநாயக்க, ஒன்பது ஆண்டுகளாகத் தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்குச் சவால் விடுத்தார். முகநூலில் பகிரப்படும் கருத்துக்களைத் தாண்டி, அரசுக்கு உண்மையிலேயே மக்கள் ஆதரவு உள்ளதா என்பதை நிரூபிக்கும் களமாக மாகாண சபைத் தேர்தல் அமையும். ஆளுநர்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் பிராந்தியங்களை நிர்வகிப்பது அரசமைப்பை மீறும் செயலாகும். ஜனாதிபதிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்குமாயின், தேர்தலை நடத்தி அதனை நிரூபித்துக் காட்டட்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.