தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் அருகே உள்ள முண்டூரில், சிறுவயதிலேயே உயிர்நீத்த இருவரின் ஆன்மா சாந்தியடைய, துளுநாட்டின் பாரம்பரியமான 'பேய்த் திருமணம்' வெகுவிமரிசையாக நடைபெற்றது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த ஆனந்த் மற்றும் சரோஜா ஆகியோரின் நினைவாக, குடும்பத்தினர் சந்திக்…

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் அருகே உள்ள முண்டூரில், சிறுவயதிலேயே உயிர்நீத்த இருவரின் ஆன்மா சாந்தியடைய, துளுநாட்டின் பாரம்பரியமான 'பேய்த் திருமணம்' வெகுவிமரிசையாக நடைபெற்றது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த ஆனந்த் மற்றும் சரோஜா ஆகியோரின் நினைவாக, குடும்பத்தினர் சந்திக்கும் தடைகள் நீங்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்தச் சடங்கு நடத்தப்பட்டது. உயிரோடு இருப்பவர்களுக்குச் செய்யப்படும் அனைத்து திருமணச் சடங்குகளும், இவர்களுக்கும் முறைப்படி செய்யப்பட்டன. இதற்காக களிமண் மற்றும் வாழைப்பழங்களைக் கொண்டு மணமக்களின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டன. அந்தச் சிலைகளுக்குப் புத்தாடை மற்றும் நகைகள் அணிவிக்கப்பட்டு, மாலை மாற்றுதல் மற்றும் மாங்கல்யம் சூட்டுதல் போன்ற நிகழ்வுகள் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றன. தொடர்ந்து, விருந்தினர்களுக்குத் திருமண விருந்தும் அளிக்கப்பட்டது. துளுநாட்டின் ஆழமான ஆன்மீகப் பாரம்பரியத்தையும், மூதாதையர் வழிபாட்டையும் பறைசாற்றும் இந்த அரிதான நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.