மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் ரத்மலானை சைமா மேலதிக விசாரணைகளுக்காக பேராதெனிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்றிரவு (10) பேராதெனிய பொலிஸிடம்…

மலேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் ரத்மலானை சைமா மேலதிக விசாரணைகளுக்காக பேராதெனிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்றிரவு (10) பேராதெனிய பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.சிவப்பு எச்சரிக்கை விடுப்பு மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, மலேசிய பொலிஸ் மற்றும் இன்டர்போலின் ஆதரவுடன் சமீபத்தில் மலேசியாவில் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அவருடன் இருந்த ரத்மலானை பகுதியை சேர்ந்த மேலும் இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டு, மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக நேற்று பிற்பகல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.சந்தேகநபர், ரத்மலானையை சேர்ந்த 41 வயதானவர் ஆவார். இவர், 2014-ஆம் ஆண்டில் பேராதெனிய பொலிஸ் பிரிவில் ஒருவரைத் துப்பாக்கி முனையில் கடத்தி காயப்படுத்தியமை மற்றும் 2016 ஆம் ஆண்டில் ஒருவரைச் சுட்டுக்கொன்ற ஆகிய இரண்டு வழக்குகள் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு குற்றவாளி ஆவார்.நீதிமன்றத்தில் முன்னிலைஅதன்படி, கேள்விக்குட்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக பேராதெனிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், மலேசியாவிலிருந்து கைது செய்யப்பட்டு இந்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட மற்ற இரண்டு சந்தேகநபர்கள் இன்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர்.