பொலன்னருவை பகுதியில், சொகுசு காரில் 'ஐஸ்' போதைப்பொருளை கடத்தி வந்த இளம் தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், கந்தானை மற்றும் குளியாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 22 வயதுடைய ஒரு இளைஞரும், ஒரு இளம் பெண்ணும் ஆவர்.இரகசிய தகவல் இரகசிய…

பொலன்னருவை பகுதியில், சொகுசு காரில் 'ஐஸ்' போதைப்பொருளை கடத்தி வந்த இளம் தம்பதியினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், கந்தானை மற்றும் குளியாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 22 வயதுடைய ஒரு இளைஞரும், ஒரு இளம் பெண்ணும் ஆவர்.இரகசிய தகவல் இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலன்னருவ ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். சந்தேகத்திற்குரிய இளைஞரிடமிருந்து 27 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளும், பெண்ணிடமிருந்து 6,310 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் போதைப்பொருளை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் வழக்கு ஆவணங்கள் பொலன்னருவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளன.