உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் தங்களின் அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிலைநாட்ட பிரான்ஸ் அணி இன்னும் ஒரே ஒரு வெற்றி தூரத்தில் உள்ளது. கடந்த எட்டு உலகக் கோப்பை தொடர்களில் 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் கனவோடும், தொடர்ந்து 3ஆ வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும்…
உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் தங்களின் அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிலைநாட்ட பிரான்ஸ் அணி இன்னும் ஒரே ஒரு வெற்றி தூரத்தில் உள்ளது. கடந்த எட்டு உலகக் கோப்பை தொடர்களில் 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் கனவோடும், தொடர்ந்து 3ஆ வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வரலாற்றுச் சாதனை இலக்கோடும் ஐக்கிய அமெரிக்காவில் டலாஸில் புதன்கிழமை (15) நள்ளிரவு 12.30 மணிக்கு ஸ்பெய்னுக்கு எதிராக பிரான்ஸ் களம் காண்கிறது.
ஆனால், இந்த வரலாற்றுப் பயணத்திற்கு முட்டுக்கட்டை போடக் காத்திருக்கிறது ஸ்பெய்ன். நடப்பு உலகக் கிண்ணத்தில் ஒரே ஒரு கோல் மட்டுமே கொடுத்து அசைக்க முடியாத கோட்டையாகத் திகழும் ஸ்பெயய்னை வீழ்த்த பிரான்ஸ் புதிய வியூகங்களுடன் தயாராகியுள்ளது.
கடந்த காலப் பழிவாங்கல்
அண்மைய காலமாக பிரான்ஸ் அணியின் வெற்றிப் பாதையைத் தடுத்து நிறுத்துவதையே ஸ்பெய்ன் வழக்கமாகக் கொண்டுள்ளது.
யூரோ 2024: அரையிறுதியில் பிரான்ஸை வெளியேற்றியது ஸ்பெய்ன்.
தேசங்களுக்கான லீக் (2025): 9 கோல்கள் அடிக்கப்பட்ட அனல் பறந்த போட்டியில் பிரான்ஸை மீண்டும் வீழ்த்தியது ஸ்பெய்ன்.
ஆனால், இந்த முறை பிரான்ஸ் அணி முற்றிலும் மாறுபட்ட, பலம் வாய்ந்த தாக்குதல் கூட்டணியுடன் வந்துள்ளது. இத்தொடரின் மிக ஆபத்தான முன்களவீரர்களான கிலியன் மப்பே (8 கோல்கள்) மற்றும் உஸ்மான் டெம்பிலி (5 கோல்கள்) ஆகிய இருவரையும் நம்பியே பிரான்ஸின் படை களமிறங்குகிறது.
பிரான்ஸின் புதிய அஸ்திரங்கள்
பிரான்ஸின் பலம் வெறும் மப்பே, டெம்பிலியோடு மட்டும் நின்றுவிடவில்லை:
மைக்கேல் ஒலிஸே: மத்திய களத்தில் பந்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, எதிரணியின் வியூகங்களை உடைக்கும் முக்கிய இணைப்பாளராக மாறியுள்ளார்.
பிராட்லி பார்கோலா & டிஸையர் டுவே: தொடக்க வீரர்களாகவோ அல்லது மாற்று வீரர்களாகவோ களம் புகுந்து போட்டியின் வேகத்தை மாற்றும் வெடிமருந்துகளாகச் செயல்படுகின்றனர்.
காலிறுதியில் மொராக்கோவுக்கு எதிரான 2-0 வெற்றியில் பிரான்ஸின் இந்தத் தற்காப்பு மற்றும் தாக்குதல் சமநிலை தெளிவாகத் தெரிந்தது.
ஸ்பெய்ன் பலமும் பலவீனமும்
பலம் (பந்தைக் கட்டுப்படுத்தல்): பயிற்சியாளர் லூயிஸ் டி லா புன்டேவின் கீழ் ஸ்பெய்ன் அணி பந்தைத் தங்கள் வசம் வைத்திருக்கும் தத்துவத்தையே இன்னும் நம்புகிறது. லமீன் யமால் கூடுதல் பலம் சேர்க்கிறார்.
பலவீனம் (பின்களத் தடுமாற்றம்): தொடரில் ஒரே ஒரு கோல் மட்டுமே வாங்கியிருந்தாலும், காலிறுதியில் பெல்ஜியம் ஸ்பெய்னின் மத்தியகளத்துக்கு பின்னால் இருந்த இடைவெளிகளைப் பயன்படுத்தி அச்சுறுத்தியது.
பிரான்ஸ் இந்த பலவீனத்தையே குறிவைக்கத் திட்டமிட்டுள்ளது. மப்பேயின் மின்னல் வேக ஓட்டம் ஸ்பெய்ன் பின்களவீரர்களை பின்வாங்கச் செய்யும். அதே நேரம் டெம்பிலி பக்க வாட்டிலிருந்து இருந்து தாக்குதல் நடத்துவார்.

