கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI) கைது செய்வதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பாடசாலையில் கடந்த 1…

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI) கைது செய்வதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி மாணவர்களுக்கான வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் இடம்பெற்றபோதே இந்த தகாத சம்பவம் இடம்பெற்றுள்ளது.சுகாதாரப் பரிசோதனை சுகாதாரப் பரிசோதனையின் போது குறித்த அதிகாரி தங்களுக்கு உடல ரீதியாகவும் மன ரீதியாகவும் தொல்லை கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட 20ற்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றிணைந்து, கையொப்பமிட்ட முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றைப் பாடசாலை அதிபர் ஊடாகக் கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். முறைப்பாட்டிற்கு அமைவாக நேற்றையதினம் (19) பாடசாலை அதிபர், பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் வாக்குமூலம் வழங்குவதற்காகக் கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அதேவேளை, தலைமறைவாகியுள்ள சந்தேகநபரான பொதுச்சுகாதார பரிசோதகரையும் வாக்குமூலம் அளிப்பதற்காக உடனடியாகச் சமூகமளிக்குமாறு பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர்.உடனடி நடவடிக்கை இந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட தரப்பினர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற அவசர அவசர இலக்கத்திற்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

அதனடிப்படையில் துரிதமாகச் செயற்பட்ட அதிகார சபை, கல்முனைத் தலைமையகப் பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்டச் சிறுவர் பெண்கள் பொலிஸ் பிரிவினருக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் வழிகாட்டலில், கல்முனைத் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையில், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 3 Evening