ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகமாக இருக்கக்கூடிய கேது பகவான் பின்னோக்கி செல்ல கூடியவராக இருக்கிறார். கேது தற்பொழுது சிம்ம ராசியில் இருக்கிறார். சுக்கிர பகவான் ஜூலை 04 திகதி சிம்ம ராசிக்குள் நுழைகிறார். சிம்ம ராசியில் ஏற்கனவே கேது இருப்பதால் சுக்கிரனுடன் இணையும் இந்த சேர்க்கையானது…

ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகமாக இருக்கக்கூடிய கேது பகவான் பின்னோக்கி செல்ல கூடியவராக இருக்கிறார். கேது தற்பொழுது சிம்ம ராசியில் இருக்கிறார். சுக்கிர பகவான் ஜூலை 04 திகதி சிம்ம ராசிக்குள் நுழைகிறார். சிம்ம ராசியில் ஏற்கனவே கேது இருப்பதால் சுக்கிரனுடன் இணையும் இந்த சேர்க்கையானது ஜூலை 330 ஆம் திகதி வரை நீட்டிக்கும். இந்த கிரகங்களின் சேர்க்கை 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை கொடுக்கும்.நன்மையை பெறும் ராசிகள்

ரிஷபம் : ரிஷப ராசிக்கு நான்காம் இடமான சுகஸ்தானத்தில் இந்த கிரக சேர்க்கை நிகழ்கிறது. அதனால் இவர்கள் புதிய வீடு, மனை, நிலம் வாகனம் வாங்கக்கூடிய யோகத்தை பெறுவார்கள். குடும்பத்தில் இருந்து வந்து மன கசப்புகள் நீங்கும். அலுவலகத்தில் உங்களுக்கு நினைத்த வேலையை நிறைவேற்றக்கூடிய பாக்கியம் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய அளவில் லாபத்தை பெறுவீர்கள்.

துலாம்: துலாம் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் இருப்பதால் இவர்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்த தொகைகள் கைகளுக்கு வந்து சேரும். புதிய வழியில் வருமானம் கைகளுக்கு வந்து சேரும். குடும்பத்தினர் உடைய மிகப்பெரிய ஆதரவால் நினைத்த விஷயங்களை சாதிப்பீர்கள். பணவரவு நீங்கள் நினைத்தது போல் இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விருச்சிகம் : விருச்சிக ராசிக்கு பத்தாவது வீடான கர்ம ஸ்தானத்தில் சுக்கிரன் கேது இருப்பதால் நீங்கள் பார்க்கும் வேலையில் உங்களுடைய திறமைகளுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் விலகும். உங்களுடைய கணவன் அல்லது மனைவியின் வழியாக தொழில் மூலம் நல்ல முன்னேற்றமும் லாபமும் பெறுவீர்கள். பொருள் சேர்க்கை மற்றும் சொகுசான வாழ்க்கை அமைந்தாலும் துணை ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.