ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக தன்னை கைது செய்து தடுத்து வைப்பதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு திகதியிடப்பட்டுள்ளது. குறித்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக எதிர்வரும் ஜூலை 27ஆ…
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக தன்னை கைது செய்து தடுத்து வைப்பதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு திகதியிடப்பட்டுள்ளது. குறித்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதிக்கு அழைக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மனு பரிசீலனை
இம்மனு இன்று (21.07.2026) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன தனது வாய்மொழி வாதங்களை நிறைவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, மேலதிக மனு பரிசீலனையை இந்த மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் கருத்துக்களை முன்வைக்கவுள்ளார்.

