அரசியலமைப்பு மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சி.ஐ.டி. (CID) எனப்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதை எதிர்த்து, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் ம…
அரசியலமைப்பு மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சி.ஐ.டி. (CID) எனப்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதை எதிர்த்து, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் சுரேஷ் சலேவின் மனுவை ரத்து செய்யுமாறு கோரி, கொழும்பு பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை குறுக்கீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு எந்தவிதத் தடைகளும் ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்தியே இந்த குறுக்கீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவானது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட அமர்வின் முன்னிலையில், எதிர்வரும் 17-ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

