ஆப்பிள் நிறுவனம் தனது முக்கிய வருடாந்திர வன்பொருள் அறிமுக நிகழ்வை எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள Apple Park வளாகத்தின் Steve Jobs Theater அரங்கில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, அமெரிக்க பசுபிக் நேரப்படி காலை 10 மண…

ஆப்பிள் நிறுவனம் தனது முக்கிய வருடாந்திர வன்பொருள் அறிமுக நிகழ்வை எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள Apple Park வளாகத்தின் Steve Jobs Theater அரங்கில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, அமெரிக்க பசுபிக் நேரப்படி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும்.

“Surprise and Shine” என்ற கருப்பொருளுடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வில், புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமாகும் என தொழில்நுட்பத் துறையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த சாதனம் “iPhone Ultra” என அழைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், மடிக்கக்கூடிய ஐபோன் தொடர்பான எந்தவொரு விபரத்தையும் ஆப்பிள் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இதனுடன் புதிய Apple Watch மொடல்கள் உள்ளிட்ட ஏனைய சாதனங்களும் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்வு Apple நிறுவனத்தின் இணையத்தளம், YouTube மற்றும் Apple TV செயலி ஊடாக நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளது. இலங்கை நேரப்படி இந்த நிகழ்வு செப்டம்பர் 9ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகும்.