நெதர்லாந்து நாட்டின் முன்னணி பொருளாதார மற்றும் வணிக இதழான Quote Net, ஐரோப்பாவில் தொழிலதிபராய் பரிணமித்துள்ள ஈழத்தமிழரான பாஸ்கரன் கந்தையாவின் வணிகச் சாம்ராஜ்யத்தையும், தாய்நிலம் மீதான அவரது நன்றியுணர்வையும் பாராட்டி சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.நெதர்லாந்தின் முன்னணி பண…
நெதர்லாந்து நாட்டின் முன்னணி பொருளாதார மற்றும் வணிக இதழான Quote Net, ஐரோப்பாவில் தொழிலதிபராய் பரிணமித்துள்ள ஈழத்தமிழரான பாஸ்கரன் கந்தையாவின் வணிகச் சாம்ராஜ்யத்தையும், தாய்நிலம் மீதான அவரது நன்றியுணர்வையும் பாராட்டி சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.நெதர்லாந்தின் முன்னணி பணக்காரர்களை வரிசைப்படுத்தும் Quote 500 பட்டியலில் பாஸ்கரன் கந்தையாவைச் சேர்த்துப் பெருமைப்படுத்தியுள்ள அந்த ஊடகம், அவரது வாழ்க்கைப் பாதையை ஒரு திரைப்படம் போல வர்ணித்துள்ளது. டச்சு ஊடகத்தின் நிதி மதிப்பீட்டின்படி, அவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு 165 மில்லியன் யூரோக்கள் (சுமார் 5,445 கோடி இலங்கை ரூபாய்) ஆகும். இதன் மூலம் அவர் நெதர்லாந்தின் மிகச் செல்வாக்குமிக்க பணக்காரர்கள் பட்டியலில் 437ஆவது இடத்தில் உள்ளார்.கிடைத்துள்ள அங்கீகாரம்.. யாழ்ப்பாணத்தின் வடலியடைப்பில் எளிய குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த பாஸ்கரன், இலங்கையில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்தார்.தனது 30ஆவது வயதில் இரண்டு நண்பர்களுடன் இணைந்து லெபாரா மொபைல் (Lebara Mobile) தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் தொடங்கினார். புலம்பெயர் மக்களை குறைந்த செலவில் தாய்நாட்டோடு இணைத்த இவரது வணிக உத்தி ஐரோப்பா முழுவதும் வரவேற்பைப் பெற்றது. 2017இல் இந்நிறுவனத்தை சுவிட்சர்லாந்து முதலீட்டாளர்களுக்கு விற்ற பிறகு, 2014இல் IBC தமிழ் ஊடகக் குழுமத்தைக் கொள்வனவு செய்து, எல்லை கடந்த பேரூடகமாக அதை இயக்கி வருகிறார்.தொழிலில் ஈட்டிய பிரமாண்ட வெற்றியின் பின்னரும், போரினால் பாதிக்கப்பட்ட தாய்நிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் வட இலங்கையில் ரீக்சா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணை சூழலியல் சுற்றுலா மையத்தை உருவாக்கியுள்ளார்.பல்வேறு வணிகங்கள் இயற்கை உரம் கொண்ட கரிமப் பண்ணைகள், மிருகங்கள் மற்றும் பறவைகள் பூங்கா, நீர் விளையாட்டு வளாகம், தீம் பார்க், நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் மற்றும் ஸ்பா உள்ளிட்ட பல அம்சங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன."முப்பதாண்டு கால போருக்குப் பிறகு நமது வடபிராந்தியத்தில் பெரிய அளவிலான பொருளாதார முதலீடுகள் நடக்கவில்லை. என் மண்ணுக்கும் மக்களுக்கும் மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற எண்ணமே இத்திட்டத்தின் பின்னணி" என பாஸ்கரன் கந்தையா Quote இதழிடம் குறிப்பிட்டுள்ளார். இந்த ரீக்சா மையத்தின் மூலம் சுமார் 400 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும், 100 பேருக்குப் பகுதி நேர வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளன. மேலும் 2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 3 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த மையத்தைப் பார்வையிட்டதால், உள்ளூர் சிறு வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் கைவினைஞர்களின் பொருளாதாரமும் கணிசமாக உயர்ந்துள்ளதாக அந்த இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.வடக்கு கிழக்கின் இன்றைய தேவை அதை வளப்படுத்தக்கூடிய பாரம்பரியமான முதலீட்டாளர்களே என்பதை உணர்த்தி, பாஸ்கரன் கந்தையா சமூகத்தின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.News link.. https://www.quotenet.nl/lifestyle/reizen/a73375336/quote-500-lid-baskaran-kandiah-resort-sri-lanka/












