வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு ஒழிப்பு பிரிவு இன்று வியாழக்கிழமை காலை வெளியிடப்பட்டுள்ள விசேட…

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு ஒழிப்பு பிரிவு இன்று வியாழக்கிழமை காலை வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 65,034 ஆகும்.

ஜூலை மாதத்தின் முதல் 08 நாட்களில் மாத்திரம் 9,654 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரையில் மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள நோயாளர்களின் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் 13,332 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 13,150 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 4,600 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 4,354 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.