அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். பங்களாதேஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், அவ்வணியின் தொடக்க வீரர் ஷாட்மான் இஸ்லாமை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் ஸ்டார்க் தனது 434…

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.

பங்களாதேஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், அவ்வணியின் தொடக்க வீரர் ஷாட்மான் இஸ்லாமை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் ஸ்டார்க் தனது 434ஆவது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு இதன் மூலம் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தின் 433 விக்கெட்டுகள் என்ற சாதனையை ஸ்டார்க் முறியடித்துள்ளார்.

இதையடுத்து, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடதுகை பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றுள்ளார்.ஸ்டார்க் தற்போது 106 டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ்வுடன் 11ஆவது இடத்தை சமப்படுத்தியுள்ளார்.

மேலும், அடுத்த கட்டமாக டெஸ்ட் கிரிக்கெட்டின் அனைத்து காலத்திற்குமான முதல் 10 விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இடம்பிடிக்க ஸ்டார்க்கிற்கு இன்னும் சில விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகின்றன.

ரங்கன ஹேரத் 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 433 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

2018ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஹெரத், நீண்ட காலமாக அதிக விக்கெட் எடுத்த இடதுகை பந்துவீச்சாளர் என்ற சாதனையை தக்க வைத்திருந்தார்.தற்போது அந்த சாதனை ஸ்டார்க் வசம் சென்றுள்ளது. ஸ்டார்க் தனிப்பட்ட முறையில் வரலாறு படைத்தாலும், டார்வின் டெஸ்டின் முதல் நாள் அவுஸ்திரேலியா அணிக்கு சிறப்பாக அமையவில்லை.பங்களாதேஸின் பந்து வீச்சு முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா வெறும் 198 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

பங்களாதேஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் 6 விக்கெட்டுகளை 55 ஓட்டங்களுக்கு வீழ்த்தி அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வரிசைக்கு சவால் விடுத்துள்ளார்.

மேலும் அவுஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் போராடி 71 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

அவுஸ்திரேலியாவை 198 ஓட்டங்களுக்கு சுருட்டிய பின்னர், பங்களாதேஸ் அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது.முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 1 விக்கெட்டை இழந்து 96 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதனால் அந்த அணி அவுஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை விட 102 ஓட்டங்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது.

இதனால், டார்வின் டெஸ்டில் முதல் நாளிலேயே பங்களாதேஸ் அவுஸ்திரேலியாவுக்கு கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.