ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை உச்ச நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்குமாறு சட்டமா அதிபர் இன்று (06) மேல்முறைய…

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை உச்ச நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்குமாறு சட்டமா அதிபர் இன்று (06) மேல்முறையீட்டு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.வாதங்கள்  9ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டன இன்று அந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத், மனுதாரரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உள்ள கோரிக்கைகள் அடிப்படை உரிமைகள் தொடர்பானவை என்பதால், இந்த மனுவை விசாரிக்கும் அதிகார வரம்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்போது, மனுதாரரான கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தனது சமர்ப்பிப்புகளை நிறைவு செய்தார்.

அதற்கமைய, குறித்த வழக்கு மேலதிக சமர்ப்பிப்புகளுக்காக எதிர்வரும் 9ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மனுதாரர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தனது வாதங்களை நிறைவு செய்தார்.

இதனையடுத்து மேற்கொண்டு வாதங்கள் இம்மாதம் 9ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டன.