முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேசந்திர தான் வெலிக்கடை சிறைச்சாலையிவ் இருந்த போது நடந்த சம்பவங்கள் தொடர்பில் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் பல கொடூரமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் தமிழ் பெண் கைதி ஒருவர் தனது கையை பிடித்து கொண்டு விம்மி விம்மி அழுது…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேசந்திர தான் வெலிக்கடை சிறைச்சாலையிவ் இருந்த போது நடந்த சம்பவங்கள் தொடர்பில் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் பல கொடூரமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் தமிழ் பெண் கைதி ஒருவர் தனது கையை பிடித்து கொண்டு விம்மி விம்மி அழுது கொண்டு சொன்ன கதை: அவள் ஒரு அமைதியான அப்பாவிப் பெண்.நிதிமோசடி ஒன்றில் அவரை திட்டமிட்டு சிக்க வைத்துள்ளனர். அந்த குற்றத்திற்காகவே அவர் சிறைக்கு வைந்திருந்தார்.அழுதுகொண்டு கூறிய விடயம்ஒரு நாள் நீதிமன்றத்திற்குச் சென்று வந்துவிட்டு எனது கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதார், "எனக்கு முடியாது, என்னை இதிலிருந்து எப்படியாவது காப்பாற்றுங்கள். நீங்கள் வெளியில் சென்றாலும் எனக்கு உதவி செய்யுங்கள். "நான் ஒருபோதும் எனது கணவர் முன்னிலையில் கூட உடைகளை முழுமையாகக் களைந்தவள் அல்ல. எனக்கு இப்படி செய்துவிட்டார்கள் என்று அழுதார் " அவருக்குச் சிங்களம் தெரியாது. அவர் என்னிடம் ஆங்கிலத்தில்தான் கூறினார். தமிழ் பெண்கள் கூச்ச சுபாவத்துடன் வாழும் மிகவும் நாகரீகமானவர்கள். பாவம் என்னிடம் வந்து எனது கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதார். என்னை சிறைச்சாலை பொலிஸார் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் பேசியதாகவும் மிகவும் அருவருக்கத்தக்க கேலிகளை செய்து கருப்பு, அசிங்கம் என்று பேசியுள்ளனர். அப்போது அவர் அதைச் சொல்லும் போது எனக்கும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போனது. ஏன் இப்படிச் செய்கிறார்கள்? இப்போது அந்த பெண் வெளியில் வந்து விட்டார். அதாவது சிறைச்சாலைக்குள் போதை பொருட்களை தங்களின் மறைவிடங்களில் வைத்து கடத்துவதை தடுப்பதற்காகவே சிறைச்சாலை பொலிஸார் இவ்வாறான சோதனைகளை செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலை பொலிஸாரின் கொடுமைகள்வழக்கு இருக்கும் நாளில், அதிகாலையில் விழித்துக்கொண்டு வழக்குக்குச் செல்கிறார்கள். வழக்குக்குச் சென்று அங்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல், சாப்பிட ஒன்றும் கொடுப்பதில்லை. வழக்கு முடிந்து, மற்றவர்களின் வழக்குகளும் எல்லாம் முடிந்து, திரும்பி வரும்போது மாலை நான்கு ஐந்து மணி ஆகிவிடும்.சிறைக்கு வந்த உடனே அங்கு தினமும் செய்யும் பரிசோதனையின் போது உடைகள் அனைத்தையும் களைந்து, டார்ச் லைட் (Torch) அடிக்கிறார்கள். இருமச் சொல்கிறார்கள்.எனவே, அந்த நேரத்தில் அது , கடமை என்று கூறலாம். ஆனால் ஒரு பெண்ணின் உடலை இன்னொரு பெண் பார்த்துச் சிரிக்கிறார்கள் என்றால் அதுதான் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாத விடயம் என்கிறார். பத்து பேர் இருக்கும் இடத்தில் 50 பேர் நெரிசலாக அடைபட்டு, கழிவறைக்குச் செல்ல முடியாது, கழிவறைக்கு நீண்ட வரிசை. இது போன்ற பல பிரச்சினைகளுடன் இருக்கும் கைதிகள் பெரும் மன அழுத்தத்தில்தான் இருக்கிறார்கள். ஒழுங்கான உணவும் இல்லை. நாம் முதலில் அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.நீர்கொழும்பில் நடந்த சம்பவத்தின் போது கைதிகள் இவ்வாறான சம்பவங்களை மனதில் வைத்திருந்திருக்க கூடும் என குறிப்பிட்டுள்ளார்.