தமிழ் திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், சென்னையில் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 2007-ல் வெளியான ‘கல்லூரி’ படம் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். த…
தமிழ் திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், சென்னையில் இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 2007-ல் வெளியான ‘கல்லூரி’ படம் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து ரெட்டைச்சுழி, மகிழ்ச்சி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.சிவகங்கையை சேர்ந்த அவருக்கு இளம் வயதில் போட்டோகிராஃபி மீது ஆர்வம் வந்துள்ளது. அதன் பின்னர் சினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். இந் நிலையில் சென்னை தரமணியில் உள்ள புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (10) காலை அவர் காலமானாதாக தெரிவிக்கபப்டுகின்றது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

