வவுனியா கோவில்குளம் பகுதியில், மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின் போது, கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் 32 கிலோகிராம் 400 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்…

வவுனியா கோவில்குளம் பகுதியில், மேற்கொள்ளப்பட்ட முற்றுகையின் போது, கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, கஞ்சா கலந்த மாவா போதைப்பொருள் 32 கிலோகிராம் 400 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 41 வயதுடைய கோவில்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபரை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.