திருகோணமலை கந்தளாய் பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் 22 மாணவர்கள், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற விஷ விதைகளை உட்கொண்டதன் காரணமாகப் பாதிக்கப்பட்டு, கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் நால்வரின் நிலைமை சற்று கவ…

திருகோணமலை கந்தளாய் பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் 22 மாணவர்கள், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற விஷ விதைகளை உட்கொண்டதன் காரணமாகப் பாதிக்கப்பட்டு, கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் நால்வரின் நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களில் ஒருவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த ஒரு வகை விதையை உட்கொண்ட பிறகு, இந்த மாணவர்கள் உடல்நலக்குறைவுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந் நிலையில்  இந்த சம்பவத்தால்  அங்க்கு  பரப்பான நிலைமை   காணப்படுவதாக  மேலும் தெரிவிக்கபப்டுகின்றது.