தம்பலகாமத்தில் கஜமுத்துவுடன் ஆறு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(26.6.2026) மெற்கொள்ளப்பட்டுள்ளது.கிண்ணியா வீதியில் உள்ள 'ரத்து பாலம' (சிவப்பு பாலம்) அருகில் தம்பலகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களான அபேசேகர உள்ளிட்ட குழு…
தம்பலகாமத்தில் கஜமுத்துவுடன் ஆறு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(26.6.2026) மெற்கொள்ளப்பட்டுள்ளது.கிண்ணியா வீதியில் உள்ள 'ரத்து பாலம' (சிவப்பு பாலம்) அருகில் தம்பலகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களான அபேசேகர உள்ளிட்ட குழுவினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.மேலதிக விசாரணை இதன்போது, தம்பலகாமத்தில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த மோட்டார் ரக வாகனத்தை மறித்து பொலிஸார் சோதனையிட்டபோது, வாகனத்திற்குள் கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, குறித்த கஜமுத்துவையும் அதனுடன் பயணித்த நபர்களையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
மேலும், இந்த கடத்தலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், அந்த மோட்டார் வாகனத்துடன் இணைந்து பயணித்த முச்சக்கரவண்டியும், அதில் பயணித்த நபர்களும் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

