விஷப்பாம்பு கடியிலிருந்து தம்பியைப் காப்பாற்றுவதற்காக அண்ணன் ஒருவர் மேற்கொண்ட போராட்டம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உத்தரபிரதேசத்தின் ஹார்டோய் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் (21) என்ற இளைஞர், சமீபத்தில் வயலில் வைக்கோல் கட்டுகளை எடுக்கு…

விஷப்பாம்பு கடியிலிருந்து தம்பியைப் காப்பாற்றுவதற்காக அண்ணன் ஒருவர் மேற்கொண்ட போராட்டம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில்  உத்தரபிரதேசத்தின் ஹார்டோய் மாவட்டத்தைச் சேர்ந்த அருண் (21) என்ற இளைஞர், சமீபத்தில் வயலில் வைக்கோல் கட்டுகளை எடுக்கும்போது எதிர்பாராதவிதமாகப் பாம்பு தீண்டியுள்ளது. இதனால் விஷம் உடல் முழுவதும் வேகமாகப் பரவியதால் அவர் மயக்கமடையத் தொடங்கியுள்ளார். இதனைக் கவனித்த அவரது அண்ணன் உடனடியாக அவரை அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அருணைப் பரிசோதித்த வைத்தியர்கள், பாம்பு விஷம் நரம்பு மண்டலத்தைப் பாதித்துள்ளதால் அவர் எந்த நேரத்திலும் முழுமையாகச் சுயநினைவை இழக்கக்கூடும் என்றும், எனவே அவரை எக்காரணம் கொண்டும் தூங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.

வைத்தியர்களின் எச்சண்டியால் பதறிப்போன அண்ணன், தம்பியைத் தூங்கவிடாமல் பாதுகாப்பதற்காக ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடியுள்ளார். தம்பி சோர்வடைந்து கண்ணை மூடும்போதெல்லாம் அவனைக் காப்பாற்றும் ஒரே நோக்கத்துடன் சுமார் 150 முறை அவனது கன்னத்தில் மாறிமாறி அறைந்து விழித்திருக்க வைத்துள்ளார்.

இதற்கிடையில் மருத்துவர்கள் வழங்கிய தீவிர சிகிச்சையின் பலனாக அருண் அபாய கட்டத்தைத் தாண்டி உயிர்பிழைத்தார். தம்பியின் உயிரைக் காப்பதற்காக அண்ணன் மேற்கொண்ட இந்த அசாதாரணமான பாசப்போராட்டம் வைத்தியசாலையில் இருந்த அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.