அவசியமின்றி இந்திய மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் எனவும் வெளிநாடுகளில் திருமண நிகழ்வுகளை நடத்த வேண்டாம் எனவும் பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருக்கிறார். இது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி ‘அவசியம் இன்றி தங்கம் வாங்க வேண்டாம். இந்திய பொருளாதாரம் 7.8 சதவீத வ…

அவசியமின்றி இந்திய மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் எனவும் வெளிநாடுகளில் திருமண நிகழ்வுகளை நடத்த வேண்டாம் எனவும் பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி ‘அவசியம் இன்றி தங்கம் வாங்க வேண்டாம்.

இந்திய பொருளாதாரம் 7.8 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.. உலக சவால்களுக்கு மத்தியிலும் இந்த பொருளாதார வளர்ச்சி நமக்கு கிடைத்திருக்கிறது.Made In India இயக்கத்தை எல்லோரும் பின்பற்றுங்கள்

இந்தியாவிலேயே திருமணம் நடத்தும் Made In India இயக்கத்தை எல்லோரும் பின்பற்றுங்கள்.. வெளிநாடுகளில் திருமணம் நடத்துவதையும், பொழுதுபோக்கு பயணங்களையும் தவிர்த்து விடுங்கள். சுதேசி பொருட்களை பயன்படுத்துங்கள்.. 2020 கொரோனாக் காலம் முதல் இப்போது வரை ஸ்திரத்தன்மை ஏற்படவில்லை.

ஆனபோதும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. எங்கு பார்த்தாலும் போர் பற்றிய செய்திகளாக இருக்கிறது.. உலகம் நெருக்கடிகளால் சூழப்பட்டிருக்கிறது’ என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.