முடிவுக்கு வந்த 2026 கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை ஸ்பெய்னின் அணித்தலைவர் றொட்றி பெற்றிருந்தார். மத்தியகளத்தைக் கட்டுப்படுத்தியிருந்த றொட்றி, எதிரணிகள் தன்னைத் தாண்டி கோல் பெறுவதைத் தடுத்து நிறுத்தியிருந்தார். இதேவேளை றொட்றிக்கு அடுத்தத…
முடிவுக்கு வந்த 2026 கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரின் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை ஸ்பெய்னின் அணித்தலைவர் றொட்றி பெற்றிருந்தார்.
மத்தியகளத்தைக் கட்டுப்படுத்தியிருந்த றொட்றி, எதிரணிகள் தன்னைத் தாண்டி கோல் பெறுவதைத் தடுத்து நிறுத்தியிருந்தார்.
இதேவேளை றொட்றிக்கு அடுத்ததாக வெள்ளிப் பந்தை ஆர்ஜென்டீனாவின் லியனல் மெஸ்ஸியும் வெண்கலப் பந்தை பிரான்ஸின் கிலியன் மப்பேயும் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் சிறந்த இளம்வீரருக்கான விருதை ஸ்பெய்னின் பின்களவீரரான பெள குபர்சி பெற்றிருந்தார். தொடர் முழுவதும் ஒரு கோலையே எதிரணிகள் பெற ஸ்பெய்ன் அனுமதித்திருந்த நிலையில், தொடரின் சிறந்த கோல் காப்பாளராக ஸ்பெய்னின் உனய் சிமோன் தெரிவாகியிருந்தார்.
இதுதவிர சிறந்த நன்னடத்தையை வெளிப்படுத்திய நாடாக நெதர்லாந்து தெரிவாகியிருந்தது.

