யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அரச போக்குவரத்து சேவையின் பேருந்து, தனியார் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் மற்றும் வேலைகளுக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சம்பவமானது நேற்ற…

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை அரச போக்குவரத்து சேவையின் பேருந்து, தனியார் பேருந்துடன் போட்டியாக சென்றமையினால் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் மற்றும் வேலைகளுக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சம்பவமானது நேற்றைய தினம் (24.08.2026) இடம்பெற்றுள்ளது.போட்டியாக பயணித்த பேருந்துக்கள் பருத்தித்துறை சாலையின் பேருந்தானது காலை 5:45 மணியளவில் கோவில் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி முதலாவது சேவையினை வழமையாக நடத்தி வருகின்றது. இதில் நகர பகுதியில் கல்வி கற்கின்ற மாணவர்கள் மற்றும் அரச தனியார் ஊழியர்கள் செல்வது வழமையாகும். ஆனால் நேற்றைய தினம் குறித்த பேருந்தானது வழமையான நேரமான 5:45 மணிக்கு செல்லாமல் 15 நிமிடங்கள் முன்னதாக, தனியார் பேருந்து புறப்படும் நேரத்திற்கு  போட்டியாக சென்றாமையால் அரச பேருந்தை பயன்படுத்தும் உயர்தர பரீட்சை எழுதும் பல மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

தொடர்ச்சியாக வடமராட்சி - கிழக்கு பகுதியில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறிப்பாக உரிய நேரத்திற்கு செல்லாமை, சேவையை இடை நடுவில் நிறுத்துவது, தனியார் பேருந்துகளில் அரச பேருந்தை விட அதிக கட்டணம் அறவீடு செய்வது, நாகர்கோவில் - பருத்தித்துறை தனியார் பேருந்து சேவை நிறுத்தப்பட்டமை, பருத்தித்துறை - கொழும்பு, பருத்தித்துறை - வவுனியா சேவை உட்பட அரச தனியார் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளமை ஆகியவை இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாகும்.நேற்றைய தினம் உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் கட்டைக்காடு தொடக்கம் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிக பணம் செலவு செய்து முச்சக்கர வண்டி உட்பட வாடகை வாகனங்களில் பயணம் செய்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை சாலை முகமையாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவர்களை தொடர்புகொள்ள முடியாமல் போயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9