தனியார் உணவகத்தின் உரிமையாளர் விராஜ் விக்ரமநாயக்க கைது வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join தனியார் வர்த்தக உணவகத்தின் உரிமையாளரான விராஜ் விக்ரமநாயக்க மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது நிறுவனத்தில் பணியாற்றிய ஊழி…
தனியார் உணவகத்தின் உரிமையாளர் விராஜ் விக்ரமநாயக்க கைது
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
தனியார் வர்த்தக உணவகத்தின் உரிமையாளரான விராஜ் விக்ரமநாயக்க மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவரைத் திட்டி, அச்சுறுத்தித் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹரகமவில் உள்ள குறித்த வர்த்தக நிலையத்தின் ஊழியர் ஒருவரைத் தாக்கிய காட்சி சமூக ஊடகங்களில் பரவியிருந்தது.
அந்தச் சம்பவம் தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர், இரண்டு சட்டத்தரணிகள் ஊடாக இன்று செவ்வாய்க்கிழமை காவல்துறையில் சரணடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதான குறித்தநபர் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

